ஒவ்வொரு நிகழ்விலும், எதை எப்போது எதிர்பார்க்க வேண்டுமென்ற ஒரு திட்டக்குறி தானே எழுகிறது.. ஒரு தாலிகட்டுக் கல்யாணத்தில் என்ன என்ன வாத்தியங்கள் இசைக்கப்பட்டாலும் வேறு ஏதேது நடைபெற்றாலும் தாலிகட்டும் நேரத்தில் அது காணாமற் போய் மீண்டும் கண்டெடுக்கப்பட்டுக் கட்டப்படுகிறது என்றால் அதைத் '' தாமதம்'' என்று சொல்கிறோம். சிலப்பொழுது நடத்துநர் அல்லது சோதிடர் குறித்த நேரம், தவறிவிட்டமையால், அது தாமதமாயிற்று என்ப.
இதைக் காலந்தாழ்த்தல், நேரத்தளர்வு என்றும் கூறலாம்..
அட்டி என்பது: இது அடு+ இ எனல் தான். இதன் பொருள்: அடுத்து இடுதல். இப்போது செயல்தக்க தொன்றை, அடுத்த காலத்துக்கு அல்லது இடத்திற்கு வைத்துக்கொள்வது . இதன் பொருள்: தெளிவாக அமைந்துள்ளது. டகரம் இரட்டித்தது என்பர். இது யாதெனின், அ+ ட்+ ட்+ இ > அ-ட்+டி என இரட்டித்தல் காண்பீர்.
அப்பியந்தம் என்ற சொல்லைப் பயன்படுத்துவார் இன்று குறைவு. இது அ+பின்+ அண்+ து+ அம் என்பதுவே. அ+ பி( ன்)+(ய*)+ அண்+ து + அம்> அப்பியண்தம் > அப்பியந்தம் ஆகும். இதுவும் நல்ல புனைசொல் தான்; அதற்குப் பின் அடுத்து வந்து அமைவது என்பது பொருள். இது அப்பியந்தரம் என்றும் வரும். அ+ பின்+ அண்+ தரு + அம் > அப்பியந்தரம் என்றாகும். இங்குப் பின் என்பதில் னகரம் மறைந்தது. இது எடுபடாவிடாவிடின் சொல்லழகு குன்றும். ''பினண்த'' என்று வருதலில் அழகில்லை.
வேகக் குறைவினால் தாமதம் ஏற்படுகிறது. எனவே '' அவேகம்'' என்பது வேகக்குறைவு அல்லது வேகமின்மை என்று பொருள்பட்டு, பயன்படுத்துவாரின் உரைதிறத்தால் தாமதம் என்றே பொருள்தர வல்ல சொல்லுமாகலாம்.
தாமதம் என்பது, தாழும் + அது + அம் என்ற சொற்றொடரில், ழு வை எடுத்துவிட்டால், தாம்+ அது+ அம் ஆகி, தாமதம் எனவரும். தமிழ்ப்புனைவு ஆகும். சம ஒலி மொழியாகிய சமஸ்கிருதத்துக்கும் உரியது. காலம் தாழும் அதுதான் தாமதம். இத்தமிழ்ச்சொல்லை , சமஸ்கிருதமும் பயன்படுத்தியது நம் கொடைப்பெருமை என்றாலும் உள்ளூர் மொழியாகும் அதுவும்,
ஒரு மொழி என்றால் - கடன்வாங்குவது அப்புறம் பார்க்கலாம், போதுமான சொற்கள் வேண்டுமே, இப்படிப் படைத்து அளித்தவர்களுக்குப் பின் தோன்றல்கள் என்ற முறையில் நாம் நன்றியுடன் இருப்போம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.