இச்சொல்லை அறிக.
தூபமிடுவதற்குரிய கைப்பிடி ஏனத்தை, தூபக்கால் என்பர். தடவு, இந்தளம் என்ற பெயர்களும் உள்ளன. இடுந்தளம் என்பது சுருங்கி இந்தளம் ஆகியுள்ளது அறிக. எரியும் கரி கீழே கொட்டிவிடாமல் தடுப்பது தடு+ வு > தடவு என்பது பொருத்தமான பெயர், இதில் உள்ள டுகரம் டகரமாய் அமைந்துள்ளது. இது தடவுதல் என்ற வினைச்சொல்லுடன் ஒத்திருப்பதனால் தொல்லை இல்லை.
தூவு> தூவம்> தூபம் என்பதில் வகரம் பகரமாய்த் திரிந்துள்ளது. வகர பகரப் போலி. வகு--- பகு என்பது போலும் வகர பகரப் போலி இதுவாகும்.
தூப தீப நைவேத்தியம் என்பவற்றில் தூபம் இடம்பெறுகிறது. தமிழுக்கும் சம ஒலி மொழியாகிய சமஸ்கிருதத்துக்கும் இச்சொற்கள் உரியவை. தீ > தீபு> தீபம் என்பதும் நெய்வைத்து இயலுதல் என்பதன் காரணமாக நைவேத்தியம் என்று வந்தது திரிபு. நெய் வைத்து வணக்கம் நடைபெறுதலால் நைவேத்தியம் என்று வந்தது சம ஒலித் திரிபு.
சம ஒலி என்பது ஓசை ஒத்துவரும் மொழி.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.