இன்று இந்தச் சொல்லைப் பார்ப்போம்.
முதலில் தரவு என்னும் சொல்லைப் பார்ப்போம்.
தரவு என்பதில் அடிச்சொல் அல்லது பகுதி '' தரு '' என்பதுதான். இதை வினையடி என்னலாம். இதில் ஏற்படும் வினைமுற்றுக்களைச் சொல்வதாயின், தருகிறான், தருகிறாள், தருகிறது எனபனபோலும் சில கூறலாம். ஆனால் தமிழ் ஓரளவே அறிந்தவனுக்கு, தரவு என்பதும் தருகிறான் என்பதும் தொடர்பற்றவையாகத் தோன்றும். அப்படித் தோன்றுகிற ஒருவன் சொல்லாய்வு அறியாதவனா யிருப்பினும், மொழியை வேறு கோணங்களில் நன்கு அறிந்து பயன்பெறத் தக்கநிலையில் இருப்பானாகவும் இருத்தல் கூடும். மொழிப் பயன்பாட்டாளன், சொல்லாய்வு அறியாமலே ஒரு நல்ல கட்டுரையோ கவிதையோ எழுத அறிந்திருக்கலாம். இலக்கணம் அறியாமலே பலர் மொழியை நல்லபடி பிழையின்றிப் பயன்படுத்தும் திறனுடையார்.
தரப்படுவது தரவு.
உ என்பது பண்டைத் தமிழில் இருந்த, இன்னும் இருக்கின்ற ஒரு சுட்டுச்சொல்லாகும். இதன் பொருள் ''முன்னிருப்பது'' என்பதாகும்.. அதிகாரத்தில் நமக்கு மேலிருப்பவர் அல்லது நமக்குக் கட்டளைகள் பிறப்பிக்கத் தக்க ஒருவர், அக்கட்டளையைப் பிறப்பித்துக் கடைப்பிடிக்குமாறு நம்மைப் பிணிப்பதே உத்தரவு ஆகும். உ என்பது முன்னிருப்பது என்பதை ''உன்'' என்னும் சொல்லிலிருந்து அறிந்துகொள்ளலாம். உன் தாய் என்பதில் என்பவள் உனக்கு முன்னிருந்து உன்னைப் பெற்றவள். இந்தச் சொல்லின் மூலம் ''உ'' என்ற சுட்டுச்சொல் தான்.
தமிழ்ச் சொற்கள் என்பவை, தமிழில் காணப்படலாம். சமஸ்கிருதத்திலும் காணப்படலாம். தமிழிலிருந்து திரிந்த சொற்களும் திரியாத சொற்களும் சமஸ்கிருதத்திலும் வழங்கும் என்பதறிக.
தமிழில் திருக்குறள் பாடியவரே சமஸ்கிருதத்திலும் சாணக்கியர் என்று அறியப்படுகிறார். நம் எழுத்துக்கள், ஆக்கங்கள் பல்வேறு இடங்களில் பதிவு பெற்று இருக்கின்றன. ஒவ்வோரிடத்தில் வேறு நபர் என்று எண்ணபடும் ஒருவரை சிலவேளைகளில் அறிந்து சிலர் வியப்பதுண்டு. அதுபோலவே இதுவும்.
ஒவ்வொரு கருத்தினையும் ஒரு சாணுக்குள் அடக்கிவர்தாம் சாண் அ(ட)க்கியவ்ர். இந்தப் பெயரில் அடக்கியவர் என்பதில் உள்ள (ட) குறுக்கப்பட்டுள்ளது. ட முதலிய கடும் ஒலிகளை ஒடுக்கிச் சொல்லமைப்பது ஒரு திறமையும் நற்புத்தியும் ஆகும். இலக்கணத்தில் இதற்கு இடைக்குறை என்று பெயர். கவிதையில் இது வரும்: என்னில் - எனில் என்பது காண்க. பேச்சிலும் வாருங்கள் என்பது வாங்க என்றாகும். இச்சொல் ள் மறைந்து கடைக்குறையும் ஆகும்.
இச்சொல் அடக்குதல் - அக்குதல் தான் ( ககர மெய் நீக்கினால்), என்றாலும் அதை அஃகுதல் என்றே முன்னோர் எழுதியதால் நாம் அதையே பின்பற்றுவோம். அக்கம்பக்கம் என்ற சொல்லிலும் அக்கம் என்பது ஓர் தொலைவுக்குள் அடங்கிய பகுதி என்பதே குறித்து, டகரம் ஒழிந்தமை தெரியக்காட்டும்.
சம ஒலியமைப்புடன் அடுத்து நின்ற மொழி சமஸ்கிருதம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.