குருவிக்கு ஆர் வந்தார் > குருவிக்கார் வந்தார்> குருவிக்காரன் வந்தான் என்றபடி வந்த சொல்தான் இது. இங்கு குருவிக்கு அவர்> என்பதே குருவிக்கவர்> குருவிக்கார் என்றும் வரும். காரன் என்பது ,..கு+ஆர்+அன் என்பதன் பிறழ்பிரிப்பு. ஆர் என்பது ஆர்> ஆரன், இது கு+ ஆர்+ அன் என்பதே.
அப்பத்துக்கு அவர்> அப்பத்துக்கவர்> அப்பத்துக்கார்> அப்பக்கார்> அப்பக்காரன். இப்போது காரன், காரர் என்பன வந்தன.
இது போல் பிறழ்பிரிப்புச் சொற்கள் முன்னர் மொழியறிஞர்களால் எடுத்துரைக்கப் பட்டுள்ளன.
வாழ்கு+ இன்று+ ஆன் > வாழ்கின்றான் என்று வந்தது காண்க.
அன்றி, கின்று என்பது ஓர் நிகழ்கால இடைநிலை என்றனர். அதன் மூலம் கு+ இன்று என்பதுதான். இலக்கணியர் இதை மறைத்தனர். நன்னூல் இப்படிச் சொல்லும். தவறு ஒன்றுமில்லை. விரைவாக உணர்ந்துகொள்வதற்காக இலக்கணம் இப்படிக் கையாளும்.
இது வடநாட்டில் கார் என்று குன்றிவழங்கும்.
இன்னொரு விளக்கமும் உண்டு. பின் சொல்வோம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.