வி என்பது சிறப்புடைய என்று பொருள்தரும் ஒரு முன்னொட்டு. வியன், விழுமிய, விரி(தல்) முதலிய சொற்கள், விரிவு, சிறப்பு என்றெல்லாம் பொருள்தருவன. இதைச் சுருக்கித்தான் வி- என்பது முன்னொட்டாக ஏற்படுத்தப் பட்டதென்பது உணர்க.
மானுதல் எனின் ஒத்திருத்தல். மன் என்ற சொல்லும் மன்னுதல் என்று வினையாகும். மன் - மன்+ இது+ அன் > மனிதன். து என்பது அஃறிணை ஒருமை என்றாலும், பல சொல்லாக்கங்களில் ஆக்கத்துணைச்சொல்லாகப் பயன்பாடு கண்டுள்ளது. அழிதல், ஒழிதல் என்பனவில் தல் என்பது து+அல் >தல் என்பதே ஆகும். நரி ஓடியது என்பதில் து என்பது அஃறினை ஒருமை காட்டினால், தல் என்பதில் அது வினைச்சொல் என்று குறிக்கவந்து, தொழிற்பெயராய்த் தெளிவிக்கிறது. எழுது என்பதில் அது வினையாக்க விகுதியாய் நிற்கிறது. எழுதல் வேறு, எழுதுதல் வேறு. பொருது என்பதில் அது வினையாக்கம் செய்கிறது. பொருந்து என்பதிலும் அது இன்னொரு சொல்லைப் பிறப்பிக்கிறது. தல் என்பது து+அல் இணைந்த நிலை அறிக. து என்பது என்னவெனில், அதன் தொழில் அல்லது செயல் யாது என்பதைக் கணித்தே அதற்குப் பெயர் கூறவேண்டும்.
மான என்பது ஒரு உவமவுருபும் ஆகும்.
மானம் என்றால் ஒப்பாகச் செய்யப்பட்டது என்று பொருள் கொள்ளவேண்டும்.
விழு+ மானம் > விமானம். எல்லாம் தமிழ்தான்.. குறுகி ( வி என்பது விழு என்பதன் குறுகிய முன்னொட்டாக ) விமானம் என்ற சொல் ஆகின்றது.
சம+ கதம் > சம+ கிருதம் > சமஸ்கிருதம் என்றால் சம ஒலி உடைய மொழி. எதற்குச் சமம் என்றால், தமிழுக்குச் சமமான ஒலியை உடைய மொழி. இங்கு ஸ் வந்தது ஒரு மென்மையாக்கம். சமக்கிருதம் எனில் கடினமாக இருக்கும்.
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. 1>
குறளை மனத்தில் இருத்துக.
சமம் > சமன் , இது அறம் > அறன் போலும் திரிபு.
தமிழ் மொழியின் சொற்கள் உலகெங்கும் எல்லா மொழிகளிலும் உள. And என்பது அண்டு(தல்) என்ற வினைச்சொல்லின் திரிபுதான். எட் என்ற இலத்தீன், அடு(த்தல்) என்பதன் குறுக்கம்தான். தா என்ற சீனச்சொல், தாக்கு என்பதன் வினையாக்கவிகுதி நீங்கிய வினைதான்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
1>சமம் என்பது ஒப்பு என்று பொருள்படும் தமிழ்ச்சொல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.