நண்பர் என்ற சொல்லை ஒரு சீனர், மலாய்க்காரர், இந்தோனேஷியர், வெள்ளைக்காரர் ஆகியோரிடம் சொல்லிக்கொடுத்து, உச்சரிக்கச் செய்தால் அதைச் சரியாக வெளிப்படுத்த அவர்களால் இயல்வதில்லை. இதைப் போலவே நம்மில் பலருக்கு, பிறமொழியில் பல சற்று தடுமாற்றம் ஏற்படுகிறது. இதனால் தமிழ்ச்சொற்கள் வேற்று மொழிக்காரர்களால் கையாளப்படும்போது வேறுபாடுகள் வெளிப்படுகின்றன. இது எந்த மொழிச்சொல் என்ற கேள்வி வரும்போது, பதிலைத் தருகிறோம்.
ஒரு சொல் எந்த மொழிக்கும் சொந்த மாக இருக்கும்; பிறமொழிச் சொற்களைக் கற்று, எவ்வெச் சொற்கள் எவ்வாறு திரிகின்றன என்று கண்டுபிடித்துச் சொல்லலாம். அவ் இருப்பினால் மட்டும் அந்தச் சொல்லுக்கென்று எந்த தகுதிமேம்பாடும் ஏற்படுவதில்லை. உச்சரிப்பினால்மட்டும் ஒரு சொல்லுக்கு நிலையுயர்வு உண்டாகு மென்பது ஒரு வெற்றுக்கற்பனை. பிறழ் பலுக்கினால் (தடுமாறி உச்சரித்தால்) சொல் புரியாமற் போய்விடும் இடர் உள்ளது என்பது மட்டுமே உண்மை ஆகும்.
நீங்கள் உங்கள் கருத்தை இங்குப் பதிவிடலாம். இவ்வுரிமை யார்க்கும் உள்ளதே ஆகும். இதனை நாம் மதிப்போம். ஆனால் பின்னர் உண்மை இது என்றும் சொல்லவேண்டும். நீங்களும் இங்கு இதைச் சொல்லலாம்.
நண்பர் என்பது தமிழில் வழங்கிய சொல். இதை தமிழரல்லாதார் சொல்லும்போது, நண் என்பதைச் சொல்வதற்கு இடர்ப்படுவர். அதனால் ண் என்பதை விடுத்து, நபர் என்றுதான் சொல்வர். ண் அப்படியே வந்தாலும் அரைகுறையாக வெளிப்படும். இப்படிப் பிறர்க்கு தொந்தரவு கொடுப்பதினும் நபர் என்று நாமும் சொல்லி அவர்களுடன் இணைந்துவிடுவது சிறப்பு ஆகும். உங்கள் தமிழ் நாவிற்காக மற்றவர்களைத் தொல்லைப்படுத்தாமை நன்று. அப்படி வந்தது தான் நபர், பின்னர் நபர் வேறு, நண்பர் வேறு என்று எண்ணிவிட்டனர்.
நபர் என்ற அதை ஒலித்ததனால் இன்னொரு சொல் கிடைத்துள்ளது என்று மகிழ்வு கொள்ளவேண்டும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
28.06.2029 திருத்தம்.
பகிர்வுரிமை
ர்ர
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.