Pages

செவ்வாய், 26 மே, 2026

சஹாரா என்ற அரபியிலிருந்து திரிந்த சொல்.

 சஹாரா என்ற சொல்லைக் கவனிப்போம். அரபிமொழியில் சாரா என்ற சொல் உள்ளது.  ஆனால் ஆய்வுகளில்,  சில தமிழ்ச்சொற்கள்  ஆப்பிரிக்க மொழிகளிலும் இருப்பனவாகக் கண்டுபிடித்துள்ளனர். கருப்பர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து ஆசியாவிற்கு வந்தவர்கள் என்பதும் சொல்லப்படுகிறது. மிக்க கருப்புடையோரும் சற்றுப்  பொன்னிற மானவர்களும் கலந்துதான் தமிழர் தோன்றினர் என்ற கருத்துக்களும் உள்ளன. இந்த ஆய்வுகளில் முடிந்த முடிபுகள் உண்டாகிவிடவில்லை என்ற கருத்தும் உள்ளது. இவை தெரிவியல்கள் ( theories)தாம் என்பர்.  சொல்லாய்வில் நாம் இந்த முடிபுகளுக்காகக் காத்திருக்கவேண்டியதில்லை.

அகத்தில்  ( உட்பகுதியில்)   தாவரங்கள் மிகக் குறைவாகிய இடமே பாலைநிலம் என்று குறிக்கப்பெறும்  இதையே தமிழில்  அக அறவு என்போம்.  அக அறா என்பதும் அது.  அக அறா  -  அகத்தில் தாவரங்கள் அற்ற என்று பொருள். பழந்தமிழில்,  இறுதியில்  ஆகார விகுதி பெற்ற சொற்கள் பல இருந்தன,  இன்றும் இவற்றுட் சில உள்ளன.  நிலா ( நில்+ஆ),  கல்+ஆ (கலா),  பல்+ஆ ( பலா, அதாவது பல சுளைகள் உள்ள பழம்), உல்+ ஆ  ( உலா). கலா என்பது தமிழ்ச்சொல் என்பார் பேராசிரியர் அனவரத விநாயகம் பிள்ளை. சமஸ்கிருதம் என்பதும் உள்நாட்டு மொழிதான் என்பதால்,  அது தமிழன்று  என்பது வலுவற்ற கருத்தாகிவிடுகிறது.  எம் முன் இடுகைகளில் இக்கருத்துகளின் விளக்கம் பரிமாறியுள்ளேம்.  அதாவது, அறா என்பது அறவு என்று வருதலும் உடைத்து. எதிர்மறை வினை எச்சமுமாம்.

அக எனற்பாலது,  சக என்று வரும். இது தமிழிலும் உளது.  அமணர் என்பதைச் சமணர் என்பதுடன் ஒப்பிட்டு அறிந்துகொள்க.  சக அறா>  சகாரா என்று வந்தது தெளிவாகிறது. காதிப் என்ற அரபிச்சொல்  காதை முதலிய சொற்களுடன் தொடபுற்ற சொற்கள். இந்தத் திரிபைச் சில இடுகைகளில் எடுத்துக் காட்டியுள்ளோம்.

சகாரா என்ற சொல் அரபியில் பாலை என்று பொருள்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை.

இப்படித் திரிந்த சொற்கள் பல உள்ளன. இங்கு ஒன்றிரண்டு காட்டினோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.