இந்தத் தலைப்பு ஒரு நூலாக்கத்திற்கு ஏற்ற தலைப்பு என்னில் மிகையாகது. இங்கு ஓர் இடுகையாகப் பதிவேற்றம் செய்வதால், இரண்டு சொற்களை விளக்குவதன் வாயிலாகத் தமிழ் சொற்களின் ஒலியமைப்பினை இங்கு விளக்குவேம். வேறு இடுகைகளிலும் இதனைத் தொட்டு விளக்கியிருத்தல் கூடும். அவற்றைக் காணின், அவற்றையும் கருத்தில் கொள்ளுமாறு விழைகின்றனம்.
அண் என்ற அடிச்சொல்லினின்றே அனுக்கிரகம் என்ற சொல் அமைகிறது என்பதை விளக்கியுள்ளோம். இதைச் சங்கதம் என்னும் சமஸ்கிருதத்தில் மூலமாகவும் விளக்கலாம். அவ் வாறு பிறர் விளக்கியுள்ளனர். பல சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்குறத் தக்கவையாக இருக்கலாம். மெத்த இனிய விளக்கம் எவ்வழி வருகிறதோ, அதுவே மிக்கப் பயனுள்ள விளக்கம் என்று கொள்ளுதல் வெண்டும். மொழியின் பண்புகளை நன்கு விளக்குவதே என்றும் நனறென நீங்கள் கொள்ளவேண்டும்.
இனி ஒலியமைப்பைச் சொல்வோம். அணுக்கிரகம் என்று சொல் அமைவுற்றால் முச்சுழி ணகரம் சற்று வன்மையுடைய ஒலியே ஆகும். னகரமும் ணகரமும் மெல்லினமே ஆனாலும் இஃது உண்மையாம். மேலும் முச்சுழி ணகரமாயின் பொருளில் வேறு கருத்துகள் புகுதலும் கூடும். ஆதலால் அணு என்பது அனு என்று மாற்றப்பட்டது என்பதை நாம் ஒப்புதலுடன் எடுத்துக்கொள்ளவேண்டும்.
அண் > அண்பு என்று சொல்லமைந்தால் மென்மை தவழும் அன்புக்கு ஏலாமை உணர்ந்துகொள்க. ஆகவே அன்பு என்று அமைதலே ஒலிப்பொருத்தம் உடையது என்பதும் உணர்க.
பொருட் பொருத்தம் இருப்பினும் அத்துடன் ஒலிப்பொருத்தமும் சொல்லுக்கு வேண்டுமென்பதைத் தமிழ்ச் சொல்லமைப்பு எடுத்துக் காட்டுகின்றது அறிக.
அன்பு என்பதற்கு னகரம் பயன்பாடு கண்டபடியே, அனுக்கிரகம் என்பதற்கும் அதுவே பின்பற்றப்பட்டுள்ளது போற்றற்குரியது ஆகும்.
அனுசரணை, அனுகூலம், அனுதுரிதம், அனுபோகம், அனுபவம், அனுப்பு ( வினைச்சொல்) என்பவற்றிலும் இம்முறை பயன்பாடு கண்டுள்ளது. பிறவற்றிலும் ஒலியமைப்பு இணக்கம் கண்டு தெளிக.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உடையது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.