அருமை என்னும் உணர்வு:
மனிதனுக்கு அருமையானது ஒன்று என்ற எண்ணம் எப்போது பிறக்கிறது? ஏதேனும் ஒன்று மிக்கத் தொலைவிலிருந்தால், அது அருமை என்ற எண்ணம் எளிதில் வருவதில்லை. அது அருகில் வந்தபோதே அது அவனைப் பாதிக்கிறது. இதை இன்னும் சிந்தித்து விரிவாக்கலாம். ஆனால் இதை விட்டுவிட்டோம். அருகு- அது குறைந்த போதும் அதன் அருமையை உணர்கிறான். எடுத்துக்காட்டாக, குளிருக்குத் தீக்காய்தல் அருமை. ஆனால் தீ குறைந்துவிட்டால் அதன் அருமை உணரப்படுவதாகிறது. ஒரு மனிதன் மதிக்கத் தக்க பல அருங்குணங்களை உரியவனாகிறான். அதனால் அவன் உணர்ந்து போற்றற் குரியவனாகிறான்.
அரு என்பது ஆர் என்று திரிதல்:
இப்போது அரு> ஆர் என்று திரிந்து, வந்தார் (ஆர்), போனார் (ஆர்) என்று அவன்றன் அருமை உணரப்படுகிறது. இதற்கு முன், ஒருவனே அல்லன், பலர் வந்த போது அந்த அருமை உணரப்பட்டது. நம் வீட்டுக்குப் பலர் வந்தனரே, என்னே அருமை என்று எண்ணிப் பூரித்தான். அரு> ஆர் என்று பலரைக் குறிக்கும் விகுதியாய் அது இருந்தது. வந்தார். (ஆர்).
இதற்கு மாற்றான சிந்தனை என்னவென்றால், மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும் என்று எண்ணுவது ஒன்று. கடல், உலகம் என்பன விரிந்தனவாகவும் தொலைவிலும் உள்ளனபோலும். மழையும் தொலைவில் பெய்தாலும் அருகில் பெய்தாலும் அன்ன (பன்மையில்). கலி - மகிழ்வு என்ற உண்டுபண்ணுதற் குறிப்பில், ஆர்கலி என்ற சொல் படைப்புறுகின்றது.. ஆர்கலி வாரணம் என்ற தொடரைக் கவனிக்க. வாரி+அண்+ அம்> வாரணம். இகரம் கெட்டது( தொலைந்தது).
அருணவம் ( அரு, அண், அவம்).
அருகும் தொலைவும்
அருணவம்: அருமை, அது அருகில் இருந்தாலும், (அண்> அண்மை); அவம் - அவ் அண்மை கெட்டுத் தொலைவில் இருந்தாலும். ஆகவே அருணவம் என்ற சொல் இரண்டையும் உட்படுத்தி அமைந்திருந்தாலும் என்று அறிக. அவி+ அம்- அண்மை கெடுதல் அல்லது மாறியமைதல்.
தனிமைச் சுவை உடைய சொற்களைக் கொண்டது தமிழ்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.