இதனை இன்று ஆய்வு செய்கிறோம்.
கேரளம் என்ற சொல்லை ஆய்ந்த தேவநேயனார் சேரல் என்ற சொல்லே சேரலம் என்ற திரிபு கொண்டு பின் கேரளம் என்று திரிந்தது என்று சொன்னார். ச என்ற எழுத்து க என்று திரிவதானால்தான் இவ்வாறு கூறப்பட்டது. சளி என்பது ஏறத்தாழ அரிசிக்களி போன்றே இருப்பதால் களி > சளி என்று திரிதல் இயல்பு. இந்த மாற்றம் கள்>சள் என்று மாறி ஏற்பட்டமையின் இது பொருத்தமே. ( Medical people say that phelgm is a vegitable matter. )அரிசித் தூள் பன்மைத் தன்மை உள்ளமையின் கள் என்பது சள் என்று திரிந்து பொருண்மை பிறழாமல் வந்தது. பலர் இருக்கும் இடம் ''கள்> களம்'' எனப்படுவது அறிக. பரவலாகப் பறிக்கப்படுதலால் கள்> களை என்பதும் காண்க. கள் > களர் என்பதும் அது. பலமரங்கள் (தென்னை) எடுக்கத் தருதலாலும் மற்றும் பல சொட்டுக்கள் வடிதலாலும் கள் என்ற பானம் அவ்வாறு குறிக்கப்படலாயிற்று.
தனது வலிமை பலவாறு விரிந்து ஓய்ந்துவிடுதலை சள் > சளை > சளைத்தல் என்பதும் குறிக்கிறது. விரிவாகப் பல இடங்களிலும் உடலைத் தேய்த்துத் தடவும் விளையாட்டு : சள் >சல்> சல்லாவம் எனவாகும். பல சிறியவான கற்கள் சல்லி என்பர். இவ்வாறு அறிக.
குருளுதல் > சுருளுதல் என்பதையும் க - ச திரிபில் கவனத்தில் கொள்ளுங்கள்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
பகிர்வுரிமை
இதில் சில எழுத்துக்கள் அழிந்துவிட்டனவாகையால் இது
மீட்டு எழுதப்பட்டது என்பதறிக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.