ஸகஸ்ர என்ற வடமொழிச் சொல்லே ஆயிரம் என்ற பொருளுடைய சொல்தான்.
இறை வழிபாட்டின் போது ஆயிரத்தெட்டு நாமங்கள் சொல்லி அவரை வழிபடுதல் பண்டை நெறி. அதனால் கணபதி சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் என்றப்டி ஒவ்வொரு கடவுளுக்கும் ஆயிரத்தெட்டு கூறப்படும்.
இந்த நாமங்களெல்லாம் பற்றனின் அகத்தில் சுரந்தவை தாம். அகத்தில் என்றான் மனத்தில். மனத்துள் குடிகொள்பவனே ஆண்டவன்.
அக சுர > சக(ஸ்)ர என்று மாறிற்று. இது அமணர் > சமணர் என்பதுபோலும் அகர சகரத் திரிபாகும். நாமங்களின் பிறப்பிடத்தால் ஏற்பட்ட இனிய பெயர் இது. எண்களின் பிறப்பிடமும் மனித மனமே ஆகும். எண்ணப்படும் பொருள் அகத்தின் வெளியில் இருந்தாலும் எண்ண அறிந்து வெளிப்படுத்தியது மனமே ஆகும்.
சகஸ்ர என்பதற்கு வேறு பிறப்பும் கூறுவதுண்டு, அவற்றை இங்கு ஆராயவில்லை.
நாவினால் சொல்லி அறியப்படுதலால் நாமங்களுக்கு அப்பெயர் உணடாயிற்று.
நா + அம் > நாமம், இந்தில் ம் என்பது இடைநிலை. பழங்காலத்தில் எல்லா நாமங்களும் நாவினால் சொல்லப்பட்டவையே. எழுத்தில் உள்ளவையும் நாவினால் சொல்லப்பட்டுப் பின் பதிவுற்றவை.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உடையது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.