மால் என்பது மாலுதல் என்று வினைச்சொல்லாய் மயங்குதலைக் குறிக்கும். மயங்குதலாவது கலத்தல். எடுத்துக்காட்டு: இருளும் ஒளியும் கலந்து மயங்கிய நேரம் மால் - மாலை எனப்படுதல் காண்க. பல பூக்கள் கலந்த தொடுப்பு மாலை என்பதும் அறிக. மனிதன் மயங்குதல் தெளிவும் தெளிவின்மையும் கலந்திருத்தல். இதிற் தெளிவின்மை கூடுதலாக இருக்கும்.
கருமையும் வெண்மையும் கலந்த நிலை மால்> மா என்று வரும். லகர ஒற்று மறைந்த சொல்.
சியாமளா என்ற சொல்லில் மால் என்ற சொல் மாலா> மலா என்று குன்றி நீண்டது அறிக.
சீரிய மால் > சீரிய மாலா > சீயமாலா > சியாமளா என்று திரிந்த சொல்லே இது.இதில் மாலா என்ற சொல்லே நிறம் காட்டிற்று. சீரிய என்ப ரி இடைக்குறை. தமிழல்லாத மொழியில் சீரிய > சீய > சியா என்று பிறழ்வு மேற்கொண்டது.
மாலுதல் என்ற வினைச்சொல் தமிழ். மாலினேன், மால்கிறேன், மாலுவேன் என்பன வினைமுற்றுக்கள்.
சீரியமாலை > சீயமாலை > சீயமாலா > சியாமலா>சியாமளா.
லகரத்துக்கு ளகரம் மாற்றீடு ஆனது. மங்கலம் > மங்களம் ஆனது போலும் திரிபு . மங்கல் என்பதில் அல் என்பதே விகுதி. மங்குதல் வினை: >மங்கு, அல் அதனுடன் அம் விகுதி இணைந்தது. வெண்மை குன்றி மஞ்சள் நிறம் ஏற்படும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை தரப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.