தட்சிணாமூர்த்தி என்ற பெயரை இன்று ஆய்வு செய்கையில் இரு நன்மைகள் காண்கிறோம். ஒன்று, தட்சிணம் என்பதை உணர்வதுடன் ; இரண்டு, மூர்த்தி என்னும் அழகான பெயரையும் தெரிந்து மகிழ்கிறோம்.
மூர்த்தி என்ற சொல் பலருக்கும் பெயராகவும் இலங்கும் பெருமை கொண்டது. தெய்வப் பெயர்களிலும் இணைந்து வருவது. கிருஷ்ண மூர்த்தி இராமமூர்த்தி கணேச மூர்த்தி எனவெல்லாம் காண்க.
வினைச்சொல்: முகிழ்த்தல். முகு: பொருள்: முன் சேர்தல். முன் வந்து தெரிவது. மு= முன்; கு = சேர்வுக் குறிப்பு. மு+கு > முக்கு, பொருள் முன் அல்லது வெளிக்கொணர்தல். இழ் என்பது ஒரு விகுதி. பெயரிலும் வினையிலும் இழ் விகுதியாகும். இழ் என்பது ஓர் அடிச் சொல்லுமாகும். இழ் > இழு, இழை, இழி என்பவற்றில் வெவ்வேறு ஆனால் தொடர்புறு இயக்கங்களைக் குறிக்க வரும். ஆகவே தமிழ் என்றால் தனிமைப் பண்புடன் , சுவையுடன் பொருளுடன் இயங்கும் மொழி என்று கொள்க. ஆக, முகிழ் > முகிர் > மூர். + தி (விகுதி ) > மூர்த் தி : முன்தோன்றும் தெய்வஉரு
தென்கணம் > தெற்கணம் > தெக்கணம் > தக்கணம் > தட்சிணம். ( எ> அ). எ - அ: தெரிசனம் - தரிசனம். சொன்முதல் திரிதல்.
தெற்கணம் பார்க்கும் தெய்வம் என்றாயிற்று. தெற்கணம் - தென்திசை.
கண் = இடம் கணம் இங்கு நிலப் பகுதி.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
பகிர்ந்துகொள்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.