Pages

திங்கள், 24 பிப்ரவரி, 2025

பஜனை என்னும் சொல்

  • பா. பாட்டு,  பாடு என்ற சொற்கள்  பகரத்தில் தொடங்குவன..  பா என்ற ஓரெழுத்து மட்டுமே எல்லா வடிவங்களிலும் தோன்றுகின்றது.  இதே போல் தான் பஜன் பஜனை என்ற சொற்களிலும் பகரமே தோன்றுகிறது.  டு என்பது ஒரு வினையாக்க விகுதி.  ஓடு, ஆடு, பாடு, தேடு,  இடு, இடு என்ற பல சொற்களில்  வருவது டுகர விகுதி:  இது வினையாக்க விகுதியாகும்.  இதன் அடிச்சொல் எதுவென்றால் அது பா என்பதுதான். இது பரவுதல் கருத்தினால் ஏற்பட்ட சொல். ஒரு பாவில், பல கருத்துகள் அல்லது தொடர்புபட்ட செய்திகள் பரப்பப் படுகிறது. அல்லது பரப்பி வைக்கப்படுகிறது.. எழுத்துகளும் பரவி நிற்கின்றன. எத்தனை சீர்கள் இருக்கலாம் என்ற கணக்கும் உள்ளது.

பஜ, பஜரே முதலிய வடிவங்களிலும் பகரமே வருகிறது. சீர்கள் ஒன்றுடன் இன்னொன்று தொட்டு நிற்கின்றன.  அடுத்து அடுத்து வருவதால் பா+ அடு என்றும் விரித்துச்சொல்லுதல் கூடும். ஆனால் முன் காலத்தில் படிக்கும்போது இராகம் போட்டுத்தான் படித்தார்கள்.  இப்போது பாடிப் படிப்பதற்கு வெட்கப் படும் நிலை உள்ளது.

பரவுதல் என்பதும் படருதல் என்பதும் தோற்ற உறவுமுறை உள்ளவை. படர்> பஜர் என்று தொடர்பு காணலாம்.  படர் > பஜர் என்பதும் காண்க. ஒரு பாவில் சொற்கள் படர்கின்றன என்பதும் காண்க.

ரகர டகரத் தொடர்பை, மடி> மரி என்பதிற் காணலாம்.

எந்தச் சொல் பயன்பட்டிருந்தாலும்,  பாடு> பாடன் > படன் > பஜன் என்பது உறுதி.

வா என்ற சொல், இறந்தகாலத்தில் வந்தான், வந்தாள் என்று குறுகுவதைக் காணலாம்.  பெயராய் அமைகையிலும், சாவு> சவம் என்றும்   தோண்டு > தொண்டை என்று குறுக்கமடைவது காணலாம். ஈர்த்தலில் வந்த சொல் இருதயம் என்ற வடசொல்.  ஈர்> இர்> இருது  அ அம் > இருதயம் என்று உண்டானதுதான். இரத்தத்தை இழுத்து வெளியிடும் ஈர் அல்., ஈர்தயம் > இருதயம்.

ஏனைத் தென்மாநில மொழிகளில்  பாடுபவன் என்பதற்க்கு ஈடான சொற்களையும் ஒப்புநோக்கி யுள்ளோம். " Badavanaru என்ற சொல்வடிவம் காணப்படுகிறது.   இது  "பாடுபவனார்"  என்பதற்குச் ஒப்பானதாக இருக்கிறது என்பதை அறிக.

பஜன் என்ற சொல்லை அறிந்துகொண்டீர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.