Pages

திங்கள், 16 டிசம்பர், 2024

சுத்தம் - இன்னொரு முடிபு புதிது


சுத்தம் என்றால் கலப்பின்மை என்ற பொருள்வரக் காரணம் யாது?  அதையும் இங்கு காண்போம்.

தீயினால் எரிப்பதன்மூலம் தூய்மை ஏற்படும்.   குப்பை கூளங்களை எரித்துவிடுவது,  பிணம், இறந்த விலங்குகளின் உடலை எரித்துவிடுவது முதலான செயல்கள் மூலமும் தூய்மை உண்டாகிறது. தூய்மை இன்மை அழிவுக்கும் இட்டுச் செல்லவல்லது ஆகும்.

சுத்தம் என்ற சொல் முன் விளக்கப்படும் போது,  இந்தத்  தீயினால் தூய்மை என்பது விடுபட்டுவிட்டது.  தீயினால் தூய்மை என்பதை முற்ற உணர்த்தும் பொருட்டே,  விளக்கும்  தீபமேற்றுதலும் இந்து மதத்தில் இறைவணக்கத்தில் நிறுவப்பட்டன.  இதை வெளிப்படையாக எந்த நூலும் சொல்லாவிட்டாலும் பகுத்தறிவின் மூலமாக நாம் கண்டறியலாம்.

நாம் தீயின் மேன்மையையும் பயன்களையும் அறிந்து மகிழ்ந்திருந்த காலை உலகின் பிற பகுதிகளில் வாழ்ந்தவர்கள்,  அந்த நிலைக்கு முந்து நிலையிலேதான் இருந்துகொண்டிருந்தனர்.  அதனால் அவர்கள் பின்னர் அறிந்துகொண்டிருந்தாலும்,  ஏற்கெனவே அமைந்துவிட்ட மத அமைப்பில் இதைக் கொண்டு நுழைக்க இயலாதவர்களாயினர்.  இது வரலாற்று அமைப்பு ஆகும்.

எந்த மதமும் மற்ற அமைப்புகளும் சூழ்நிலை சுற்றுச்சார்புகட்கு ஏற்பவே வளரும்.

வெண்கலத்தை கண்டுபிடிக்கா முன்பு எப்படி வெண்கல விளக்கு வைப்பார்கள்?

சுத்தம் என்பது பல்பிறப்பி ஆகும்.

வேறு எந்த வழியும் அறியாமுன் ஒரு விழுந்த பழத்தை தூ தூ என்று வாயால் ஊதிச்  சுத்தப்படுத்தினர். இந்த ஊதல் தூவிலிருந்து தூ - தூய் > தூய்மை என்ற சொல்,  தமிழில் வழங்கலானது.  அழுக்கு என்ற துப்புவதற்கு து பயன்பட்டது.  தூசு விலக்குவதற்கு தூ என்ற நெடில் பயன்பட்டது.  இயற்கை வளர்ச்சியுடன் சேர்ந்து வளர்ந்தது தமிழ்மொழி.

சுள், சுடு என்பன அடிச்சொற்கள். இவற்றினின்று எவ்வாறு சுத்தம் என்ற தமிழ் தோன்றுகிறது என்று பார்க்கலாம்.

சுள்> சுளுத்து >  சுளுத்தம்.  இது இடைக்குறைந்து சுத்தம் ஆகும்.

சுடு >  சுடுத்தம் > சுத்தம். இந்த வடிவமும் இடைக்குறைந்து சுத்தம் ஆகும்.

இது தீயைக் கண்டு பொருள்களைச் சுட்டுத் தூய்மை செய்யும் காலத்து அமைப்பு ஆகும்.

அப்போது அகராதி என்று எதுவும் இல்லை. யாப்பு இலக்கணமும் இன்னும் அமைந்திருக்காது.

யாம் முன்னரே சுட்டிக் காட்டியபடி பெரும்பாலும் வல்லொலிகள் நீக்கப்பட்டன.  இது மொழி மென்மை பெற உதவியது.

சங்கப் புலவர்கள் பெரிதும் இயற்சொற்களையே பயன்படுத்தினர்.  திரிசொற்களை அதன் இயல்வடிவம் கண்டனர்  என்றால்தான் பயன்படுத்தினர். ஒரோவழி இரண்டையும் சிலர் சொல்லாட்சிப் படுத்தினர். இதனை நீங்கள் ஆய்வு செய்துகொண்டு, பி.எச்.டி வாங்கலாம்.

சீக்கிய தொழுகை நூலை உருவாக்க அவர்கள் குருமுகியைத்தான் பயன்படுத்தினர். சமஸ்கிருதம் கடின ஒலிகள் உடையது என்பதால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.  சாமுகி மொழியில் வேறு கலவைகள் வந்து அழகு தந்தன.

சுட்டு எடுத்ததில் கலப்பு இருப்பதில்லை. அதனால் சுத்தம் என்றால் கலப்பு இல்லாதது என்றும் பொருள் பெறப்பட்டது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.