பாடலோ கவிதையோ சிலவற்றை எழுதும்போது சொற்கள் வாயில்வந்த படியே அமைக்கப்பட்டு ஒரு சொல்லும் இன்னொரு சொல்லும் எவ்வாறு இணைகின்றன என்று கவலைப்படாமல் (சொற்களை) ஒன்றுடன் ஒன்று ஒட்டி எழுதினால், அது உண்மையில் வாயில்வந்தபடி எழுதின பாட்டு அல்லது கவிதை எனலாம். நீண்டு வரும் சொற்களைக் கூடக் குறுக்காமல் மாற்றம் எதுவும் செய்யாமல் எழுதினால் ஒவ்வோரடியும் நீண்டு அமையும். இசைக்க ஏற்புடையனவாக இருக்கமாட்டா. இவ்வாறு வந்தது வந்தபடி வைத்துக்கொண்ட பாடலைத் தான் ஆதிகாலத்தவர்கள் வஞ்சி என்று சொன்னார்கள்.
வரும் இன்று > வரும் இன்னு > வருன்னு > வன்னு > வன்.
வன் + சி > வஞ்சி.
மென்மைப்படுத்தப் படாத, வன்சீர்களை உடைய பாடல். சீர் என்பது சி என்று குறுக்குற்றது.
மக்களிடை ஒவ்வொருவருமே
தக்கபடி வாய்நீட்டிய
ஒக்கவந்தவர் உரைக்காதோர்
வெட்கி நின்றார் கூட்டியவை
என்று தொடங்கினால், இதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகலாம்.
இது வருஞ்சீர்களை வைத்து எழுதியவை என்ற கருத்தின் குறுக்கமாகவும் இருக்கலாம். வருஞ் சீர் > வஞ்சீர் > வஞ்சி. இடையில் உள்ள எழுத்துக்கள் விடப்பட்டன.
ஆகவே இச்சொல்லை பல்பிறப்பி எனலாம்.
வந்தபடி ஒரு பெண்ணை ஏற்றுக்கொண்டாலும் ( கேள்வி கேட்பாடு இல்லாமல் ) அவளை வஞ்சி என்னலாம்.
கேட்பாடு என்றால் கேட்டுக் கேட்டு நேரம் எடுத்துக்கொள்ளுதல் )
தொடக்கத்தில் வன்மையுடன் தொடங்கியவை வஞ்சி என்று கொள்ளவேண்டும். இவற்றுக்குள் மென்மை என்பது காலக்கடப்பினானாலேதான் ஏற்பட்டிருக்க முடியும்.
எடுத்த எடுப்பிலே எல்லாம் சீராக அமைந்துவிட்டன என்று எண்ணுபவன் சிந்திக்கத் தெரியாதவன் ஆவான். இன்று நாம் பெறுகின்ற உரிமைகள் கொடுப்பனைகள் எல்லாம் அமைதியாக வருவதற்கு இடையில் பல போராட்டங்கள் நடைபெற்றன. அரசனைக் கழுத்தை வெட்டித் தூக்கிக்கொண்டுபோன வரலாறுகளும் உண்டு. பலர் இரத்தம் சிந்த வேண்டியிருந்தது. வரலாறு படித்தறிதல் முதன்மையாகும். பெருங்குளறுபடிகள், போராட்டம், வெட்டுக்குத்து, அரசு வீழ்ச்சி, புரட்சி, பின்னர்தான் நாகரிகம் நன்றாக அமைந்தது. ஆகவே பட்டறிவு இல்லாதவன் படிப்பறிவு என்று எண்ணிக்கொண்டு உளறலாகாது.. மற்ற நாடுகளின் வரலாற்றையும் படிக்கவேண்டும்.
வன்மை + சீறு(தல்) > வன்சீறு > வஞ்சி யாகவும் இருக்கலாமே.
சீர் என்ற சொல், சி என்று குன்றியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.