சிரத்தை என்பது நன் கு புனைவுற்ற தமிழ்ச்சொல் ஆகும். இது சிற்றூராரின் சொற்றொகுதியிலும் உள்ள சொல்லே. இதை " இவன் சிரத்தையுடன் செய்திருந்தால் இப்படி ச் சோடை போயிருக்காது " என்ற வாக்கியத்திலிருந்து இப்பொருளை உய்த்துணராலாம்.
இதை சிறத்தை என்று ஆய்வாக்காக எழுதிக்கொள்வோம்.
சிறத்தை என்பதில் உள்ள பகவுகளாவன:
திறம் (திற) / சிற / அகத்து / ஐ விகுதி.
எந்த வேலையைக் கையாள்வதாயினும் அதைச் சிறப்புடன் அல்லது திறத்துடன் மேற்கொள்ளவேண்டும்.
தகரத்துக்குச் சகரம் போலி அல்லது மாற்றீடு ஆகும்.
திற அகத்து ஐ > சிற அகத்து ஐ >
திரிபில். அகத்து என்பது அத்து என்று மாற்றம் ஆகிறது.
திற அத்து ஐ > சிற அத்து ஐ > சிரத்தை.
திறத்தை அல்லது சிறப்பை உள்வைத்து ஒன்றை முடித்தல்.
பல சொற்களில் றகரத்துக்கு ரகரம் வந்துவிடும், அது எப்போது என்றால் இந்தப் பகவுச்சொல் இன்னொரு சொல்லாக்கத்தில் வரும்போது.
எடுத்துக்காட்டு: சரியாகவும் திறமாகவும் சொல்லப்படுவது சரி + திறம் > சரித்திரம். றகரம் ரகரம் ஆயிற்று.
சிரத்தை என்பதன் தோற்றம் அறிந்தோம்.
இனி இன்னொரு அமைப்பு:
அக்கு என்றால் அங்கு சென்று சேர்தல். அ = அங்கு; கு = சேர்தல்.
திற அக்கு ஐ > சிற அத்து ஐ > சிரத்தை எனினும் அதுவே.
இவை போதுமானவை. பின்னொரு நாள் இன்னும் கூட்டுவோம்.
இரண்டு எழுத்துக்களை மாற்றிவிட்டால், யாரும் தட்டுக்கெட்டுப் போவான்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.