அரக்கன் என்னும் ஆண்பாற் சொல், இச்சொல் அன் நீக்கி அம் விகுதியைப் பெற்ற நியையில் அரக்கம் என்று வரும். அரக்கம் என்பதற்கு அரத்தம் ( ரத்தம்) என்றும் பொருள். இச்சொல்லில் தகரத்திற்குக் ககரம் வந்துற்றது.
க, ச , த என்பன ஒன்றுக்கு இன்னொன்று மாற்றீடாக வருதலுண்டு.
சகரத்துக்குக் ககரம் வரும் என்பதால், அரசன் என்பதற்கு அரக்கன் என்றும் வரும். இங்கு ககரம் இரட்டித்தது. இது பொருளிலும் திரிந்து, அரசனின் நிலைக்குத் தாழ்ந்த குணங்கள் உள்ள ஆட்சியாளனைக் குறிக்கும். இராவணனை அரக்கன் என்றபடியால் தாழ்குண அரசன் என்பது பெறப்பட்டது.
இச்சொல்லில் அரச என்பது சகர முதலாய் சரச என்று திரியும் என்பது திரிபுநெறி. ஆதலினால் அரச என்பதே சரச ஆயிற்று. ஆனால் சரச என்பது முள் என்று அரபியில் பொருள்படும் ஆதலின் அங்கிருந்து வந்திருக்கலாம் என்று ஐரோப்பிய ஆய்வாளர் கருதினர். ஆனால் நன்னாரி வேருக்கு அரக்கம் என்றும் தமிழில் பெயரிருப்பதால் இது தமிழிலிருந்து சென்ற சொல்லாக இருக்கும் என்பதே உண்மை. இதற்குக் காரணம் நன்னாரி தமிழ்நாட்டில் கிட்டுவது. தென் கிழக்காசியாவில் அரசி என்பது சரசி, சாசி என்று திரிந்து வழங்குகிறது. அகரம் சகரமாகும், எடுத்துக்காட்டு: அமணர் - சமணர்.
அரக்கம் என்பதே சரக்கம், சரசம் என்று திரிபு எய்திற்று.
பரில்லா என்பது பர - பரவும், இல்(லா) - கொடி. கொடியிடம். பர இல் - இடத்தில் பரவுவது என்பது. பாஸ்கு மொழியில் உள்ள பரில்லா என்பது தமிழில் உள்ள பர இல் என்பதுதான். இடத்தில் பரவுவது.
சாசி என்ற தமிழ்மூலம் மறைக்கப்பட்டுள்ளது அல்லது அவர்களுக்குத் தெரியவில்லை. தமிழ் அறியாதார் செய்த ஆராய்ச்சி.
அரக்கன்> அரச்சன்> ரச்சசன்> ராட்சசன் என்பதும் அறிக. சகர ககரப் போலி.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.