இன்று உவச்சன் என்ற சொல்லை ஆய்வு செய்வோம். வேறு அன்பர்கள் யாரும் விளக்கியுள்ளனரா என்று இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. இதை முடித்தபின் நாளைக்குத் தேடிப்பார்ப்போம். எம் கருத்துகளை முன் வைப்பதே நம் வலைப்பதிவின் நோக்கம்.
உ என்பது சுட்டடிச் சொல். . இதைத் தெரிந்துகொள்ள ஒரு நிகண்டையோ அகராதியையோ நீங்கள் நாடுதல் நன்று. உ என்பது முன்னிருப்பது என்று பொருள்படும் பண்டைப் பழஞ்சொல். தமிழ்ப் பழம்புலவர்கள் இதனைச் சுட்டடிச் சொல் என்றனர். எளிதாக அறிய, உன் என்ற சொல்லைப் பாருங்கள். உன் முன்னிருத்தலை ( முன் இருப்போனுக்கு உரியதை) க் குறிக்கும்.
அடுத்து இருக்கும் பகவு, ( உவச்சன்) என்ற சொல்லில்), அச்சன் என்ற சொல். இது அய்யன் ( ஐயன்) என்ற சொல்லின் திரிபு. அய்யன்> அச்சன். எப்படி என்றால், வாயில் > வாசல் என்பதில் யகரம் சகரம் ஆனது; மற்று இ (யி) என்பதும் அ ( ச) ஆயிற்று. அயல் என்பதும் அசல் என்பதன் திரிபே. இன்னொன்று: பயங்க> பசங்க என்று பேச்சில் வரும். வயம்> வசம். தமிழில் போதுமான அளவு பற்பல நூல்களையும் வாசித்தவர்க்கு இது காண அகராதி தேவையில்லை.
அச்சன் என்பதும் அய்யன் என்பதும் ஒன்றே. அச்சன் என்பது திரிபு.
ஐயன் என்பது பல்பொருளது. என்றாலும் அதன் மையக் குறிப்பு, முன்னிருப்பவர், தந்தை, தமையன் எனவாம்.
உ+ அச்சன் > உவச்சன். இங்கு வகர உடம்படு மெய் வந்தது.
உ+ ஐயன்> (உவை(ய்)யன்) > உவைச்சன் > உவச்சன் என்று காட்டினாலும் ஒன்றுதான்.
இது கல்வெட்டிலும் கண்டுபிடிக்கப் பட்டுள்ள சொல்தான்.
உவச்சர் எனில் பூசையின்போது முன்னிருந்து ஓதி உதவுவோர்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.