Pages

புதன், 11 செப்டம்பர், 2024

வைராக்கியம் என்னும் சொல்

 இதன் அடிச்சொல் வைத்தல் என்பதுதான்,

வை+ இறு + ஆக்கு+ இ + அம்

வைத்த இடத்தில் ( மனத்தில்)  ஓர் எண்ணம் இருகி ( இறுகி) (முன் வித்தியாசம் இல்லாமல் வழங்கியது) வெறோர் ஆக்கத்தை விளைவிக்குமானால் அதுவே வைராக்கியம்.  நீர் புரிந்துகொள்ளும் பொருட்டு இவ்வாறு வாக்கியப்படுத்தி உள்ளோம்.  இந்த வாக்கியத்தை மேலே குறித்த பகவுகளின் பொருளுடன் இணைத்துப் படித்து அறிந்துகொள்க. பின் உமக்கு வேண்டிய படி மாற்றி அமைத்துக்கொள்க.

படிப்பவர்க்கு உடனே பொருள் விளங்கவேண்டும் என்பதற்காக இவ்வாறு எழுதுகிறோம்.

இவ்வாறு தரவு செய்யவே இது தமிழ்ச்சொல் என்பது தெரியும்.

அறிக மகிழ்க.

 மெய்ப்பு பின்.






.----------------------------------------------------

வேறு சில குறிப்புகள்.  ஆசிரியர்க்கு.  நீங்கள் இதைத் தவிர்த்துவிடுக.

வை >  வயின். வை எனபது அடிச்சொல்லாக இருந்தால் அதிலிருந்து பிறக்கும் சொல் குறிலாகிவிடும்.  வை+ இன் >  வயின். இங்கு இன் என்பது விகுதி யானது.

வை+ அம் >  வையம்:   இது உலகம் என்று பொருள்படுவது. உலகம் என்பது கடவுளால், இயற்கையால் வைக்கப்பட்ட இடம் என்பது பொருள்.  வையகம் என்பது இதன் இன்னொரு வடிவம்.

வை+ கு+ அறை >  வைகறை:  சூரியன் அடிவானில் வைக்கப்பட்டது போல் பாதியும்  அறுத்து மீதமுள்ளதுபோல் வெளிப்பட்டுப்  பாதியும் தெரிய, விடியும் நிலை. 

அருணம் >  அறு+ உண் + அம் >  அறுணம்>   அருணம்,  இது வைகறை. சூரியன் அறுக்கப்பட்டதுபோல் பாதியும்  வெளிப்பாடு பாதியும் தெரிவது.  உண் என்பது   அறுதலுண்டது என்பதன் பொருட்டு. உள்> உண்.  அம் விகுதி.

உயரற்காலம் :  இது திரிந்து உயற்காலம் (  இடைக்குறை)  இது பின் திரிந்து உசற்காலம் ஆகி,  மெருகேறி உஷற்காலம் ஆயிற்று.

உதயம் :  உது + அ+ அம் : சூரியன் முன் அங்கு எழுந்தமைதல்.  உது = முன்.

றகரம் இன்னொரு சொல்லாக்கத்துக்குப் பயன்படுமாயின் ரகரமாக மாறும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.