ஓதுதல் என்றால் படித்தல், வாசித்தல்.
படியே ஒலிசெய்தலே படித்தல் எனப்படும். எப்படி எழுதப்பட்டுள்ளதோ அப்படியே அதை ஒலிசெய்தல். எப்படி, அப்படி, என்பவற்றை படி> படித்தல் என்பதுடன் இணைத்து அறிந்துகொள்க. இன்னொரு வகையில் சொல்வதானால் கண்ணிற் படுகின்ற வாறே நாவும் உதடுகளும் அசைந்து ஒலிசெய்தல் : படு> இதில் இகரம் வந்து "படி" ஆகிறது, படு> படி > படித்தல். இறுதியில் வினைச்சொல்.
வாயினால் ஒலிசெய்தலே வாசித்தல். வாய்> வாயி > வாயித்தல் > வாசித்தல். இங்கு யிகரம் சிகரம் ஆகும்.
ஓதுதல் என்பது ஓவென்று ஒலிசெய்தலையே முன்னே குறித்தது. ஓ என்ற ஒலி என்ற பொருண்மைச் சொல்லுடன், து என்னும் வினையாக்க விகுதி இணைந்து ஓது-தல் என்ற சொல் உருவாயிற்று. ஒலியெழுப்புதல் படிப்பதாலேயோ மனப்பாடத்திலிருந்தோ நிகழும், ஆகவே ஓதுதலென்பது சற்று விரிந்த பொருளுடைத்தாகிறது.
ஓதுரை அதாவது ஓது உரை என்ற இருசொல் இணக்கானது வடக்கில் ஹோத்ரி என்று ஆகிவிட்டது. ஓ என்று ஹ இன்றி ஒலிக்க முயலாமல் ஹ இணைத்து ஒலித்தனர். இதனுடன் உய்த்தல் சொல்லினின்று வரும் ஹோத்ரியும் இணைந்துகொண்டுள்ளது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.