மெட்டி இடுதல் என்ற இருசொற்களின் புணர்வில் யகர உடம்படுமெய் வந்து இருசொற்களும் ஒரு சொன்னீர்மை எய்துதல் வேண்டும். இது "மெட்டியிடுதல்" என்று வரும். இது தமிழ்ப் புணரியலில் வரும் இயல்பான இலக்கண முடிபு ஆகும்.
மெட்டுதல் என்ற வினைச்சொல் எட்டி உதைத்தலைக் குறிக்கும்
மெட்டு-தல் meṭṭu-tal from University of Madras "Tamil lexicon" (p. 3335)
மெட்டு¹-தல் meṭṭu- , 5 v. tr. cf. நெட்டு-. [K. meṭṭu.] To spurn or push with the foot; காலால் தாக்குதல். நிகளத்தை மெட்டி மெட்டிப் பொடிபடுத்தி (பழனிப்பிள்ளைத். 12).
மெட்டுதல் என்பதே வினைச்சொல் ஆதலின், இடுதல் என்பதை இச்சொல்லுடன் இணைக்கையில் மெட்டு(வினை)+ இடுதல் ?> மெட்டிடுதல் என்று வருமென்பது முன்பிருந்த பேரகராதிப் பதிவு என்று தெரிகிறது. இதை இப்போது காணமுடியவில்லை. இப்போதுள்ள ஆசிரியர்கள் இதை வழுவென்று கருதிவிட்டனர் போலும். இதைச் சிறிது ஆராயலாம், மெட்டு+ இ > மெட்டி என்பதால், மெட்டி இடுதல் என்பது உண்மையில் மெட்டுவதற்கு இடுதல் என்பதே. மெட்டுவதற்கு வளையம் ஓர் ஆயுதம். அதற்கு ஆயுதம் இடுதல் என்பதாம். மெடடி இடுதல் அல்லது மெட்டிடுதல் என்பன இச்சொல்லின் புணர்ச்சி. இது ஒரு திரிபு வரலாற்றினைக் காட்டவல்லது ஆகும்,
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.