தல் என்பது இடம் என்னும் பொருளிய பழங்காலத்துச் சொல். இது இன்று ஒரு விகுதியாக மட்டும் தமிழில் வழங்கி வருகிறது.
ஆக்குதல், அழித்தல் என்ற சொற்களில் வினையினோடு கூடித் தல் என்னும் சொல் பெயரைத் தருகிறது. பொருளுக்குப் பெயர்கள் உள்ளன. அத்தன்மைபோல் வினைகளுக்கும் பெயர்கள் உள்ளன. இவை தொழிற்பெயர்கள் எனப்படும். தொழில் என்றால் செயல் அல்லது வினை.
தல் என்பது இடம் மற்றும் தொடர்பு என்றோம். தல் என்பதிலிருந்து அமைந்த இடப்பெயர்களை அறிந்துகொள்வோம். இது தொடர்பு என்றும் பொருளாம். இச்சொல் திரிந்து தரை என்றுமாகும் . தல்>தர்> தரை. இடம். பூமி. இது லகர ரகரப் போலி.
தல் > தலம்: இதன் பொருள் இடம். தொடர்பு.
தலை என்று முடியும் ஊர்ப்பெயர்கள்.
இது பூசை மொழிக்குச் சென்றபின் ஸ்தலம் என்றானது, இதில் ஸ் வந்தால் த என்ற வல்லொலி ஸ்த என்று மென்மைப்படுகிறது என்ற நினைப்பில் இவ்வாறு இணைத்தனர். தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களுக்கு ஸ்த என்பது சொல்ல எளிதாயிருக்கும். ஸ் என்று கொஞ்சம் காற்றை வெளிவிட்டு இதைச் சோதனை செய்து உங்கள் முடிவை மேற்கொள்ளலாம். உங்கள் கருத்தை பகர்ப்புச் செய்துகொள்ளமாட்டோம், அஞ்சுதல் ஒழிக. பூசைகளிலும் ஸ் என்ற ஒலிவந்தால் கேட்க இனிதாகும். சில பூசாரிகள் ஸ் ஸ் என்று ஒலியெழுப்புவதைக் காணலாம். சில பூசாரிகளிடம் சென்று அவர்கள் ஸ்ஸ்ஸ்ஸ் என்று தொடர் ஒலியெழுப்புவதைக் கேட்கலாம். திருநீற்றை பற்றனின்மேல் ஊதிவிடுவதற்கும் ஸ் என்பது பயன்படும்.
தான் என்ற தமிழ்ச்சொல் தான் தன்னில் சார்பின்றி இருத்தலைக் குறிக்கும். நீங்கள் வயதானவர் இல்லையென்றால் தானே எழுந்து நிற்பீர். இந்தச் சோற்றை எல்லாம் தானே தின்றுவிடு, நான் உதவி செய்யமாட்டேன் என்று தாய் சின்னப்பையனிடம் சொல்கிறாள். தானே என்றால் அம்மாவைக் கூப்பிடாதே என்று பொருள்.
தான் என்ற தமிழ்ச்சொல் உலகப்பெரும்புகழ் அடைந்த சொல். ஸ்தான் என்றாகி உஸ்பெஸ்கிஸ்தான் வரை போய்விட்டது. தான்> தனி. தனிநாடு கேட்பவர்களும் ஸ்தான் என்று பெயர் வைத்துக்கொள்கிறார்கள். எல்லாம் நீங்கள் தானே > தாமே எழுகிறீர், தனக்கு உதவி வேண்டியதில்லை என்பதுதான். அப்புறம் பிறநாடுகளிடம் உதவி கேட்பது வேறு விடையம்.> விடயம்.
இந்தியாவின் கோணமுனையிலிருந்து உலகப்புகழ் பெற்றிருக்கிறது ஸ்தான். இதற்கு நாம் மகிழலாம்.
பண்டைக்காலத்தில் நீ என்பதற்கு நீம் என்பது பன்மை. நீம் என்பது நீம்+ கள் என்பதில் இருக்கிறது, நீங்கள் என்று மாறியுள்ளது. சீனமொழியில் நீமென் என்று வரும்.
தல் என்பது ஐ என்பதனுடன் சேர்ந்து தலை என்று சொல் பிறந்தது, இன்னொரு சொல் மண்டை என்பது, உங்களின் செயல்பாட்டுத் தலைமை இடமாக எல்லாம் தலையில் மண்டிக் கிடப்பதால் தலைக்கு மண்டை என்றும் பெயர். ஐ என்பது உலகில் உயர்வு குறிக்கும் விகுதியும் சொல்லும் ஆகும்.
தல் + ஐ > தலை
மண்டு + ஐ >மண்டை'
இரண்டுக்கும் ஐ விகுதியே வந்து சிறப்புச் செய்துள்ளது.
சிறப்பான இடம் தலை அல்லது மண்டை.
கலை என்பதற்கும் ஐ விகுதியே கொடுத்திருப்பது அதன் உயர்வைக் காட்டும் நெறியாகும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.