Pages

சனி, 8 ஜூன், 2024

காண் கிரசிலிருந்து மோடிமயக்க ஓட்டம்

 காண்கரைசற் கட்சிக்கால் கடந்தோர் எல்லாம்

கட்சிப்பின் செயிப்போராய்க் கடுகி வந்து 

வான் உயரம் தொடலாமே என்றே  நம்பி

வந்திட்ட சொல்வருதே வாழ்க வாழ்க!

வீண்குடியின் கட்டுக்குள் வீழ்ந்து ணங்கி

விடுபாடே அறியாராய் விளியா வானின்

மீன்நிலையைக் கண்டிடலாம்  எனவந் தாரே

மீண்டுவர  வாழ்சொர்க்கம்  மீளும்  வெறறி! 


காண் கிரசுக் கட்சியிலிருந்து ஓட்டம் பிடித்துச் சிலர்

பின் ஜெய்ப் பின் கட்சிக்கு வருகின்றராம். அதைப் பற்றிய

கவி இது

பின் ஜெயி(ப்)- போர் என்பது  BJP  என்று வரக்கூடியது. ஒரு போரைப் பின்பு ஜெயித்தோம் என்பது,

காண்- கரைசல்- கட்சி என்பது ஒரு கட்சிப்பெயர்.

கடுகி - விரைவாக

வான் உயரம் தொடலாம் -  எம் பி பதவி கிடைக்கலாம் என்பது

நம்பி வந்திட்ட -  நம்பிக்கையுடன் கட்சி மாறி வந்த

வீண் குடியின் கட்டுக்குள் -  பயனின்றி ஒரு குடும்பத் தலைமையில் அடக்குமுறைக்குள்

வீழ்ந்து உணங்கி -  சாய்ந்து ஈரம் உலர்ந்து போய்

விடுபாடே அறியாராய் -  எப்படி இதிலிருந்து பிய்த்துக்கொண்டு போவது என்பது தெரியாமல்

விளியா -  சாகவும் முடியாமல் ( அதாவது அரசியலிலிருந்து விலகவும் இயலாமல் )

வானின் மீன் நிலையைக் கண்டிடலாம் -  நட்சத்திர எல்லையை எட்டிவிடலாம் (என்று)

வந்தாரே - கட்சி கடந்து வந்தனரே

மீண்டுவர வாழ்சொர்க்கம் - மறுமலர்ச்சி வந்துவிடும்,

மீளும் வெற்றி  - வெற்றி வந்துவிடும் என்பது. 

கால் கடந்தோர் - இருந்து உயர்வு இன்றிக் காலம் கழித்தோர் என்றும் பொருள்.

கால் : காலம்.

அறிக மகிழ்க

மெய்ப்ப் பின்னர்




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.