வை > வயின். வை எனபது அடிச்சொல்லாக இருந்தால் அதிலிருந்து பிறக்கும் சொல் குறிலாகிவிடும். வை+ இன் > வயின். இங்கு இன் என்பது விகுதி யானது.
வை+ அம் > வையம்: இது உலகம் என்று பொருள்படுவது. உலகம் என்பது கடவுளால் வைக்கப்பட்ட இடம் என்பது பொருள். வையகம் என்பது இதன் இன்னொரு வடிவம்.
வை+ கு+ அறை > வைகறை: சூரியன் அடிவானில் வைக்கப்பட்டது போல் பாதியும் அறுத்து மீதமுள்ளதுபோல் வெளிப்பட்டுப் பாதியும் தெரிய, விடியும் நிலை.
அருணம் > அறு+ உண் + அம் > அறுணம்> அருணம், இது வைகறை. சூரியன் அறுக்கப்பட்டதுபோல் பாதியும் வெளிப்பாடு பாதியும் தெரிவது. உண் என்பது அறுதலுண்டது என்பதன்பொருட்டு. உள்> உண். அம் விகுதி.
உயரற்காலம் : இது திரிந்து உயற்காலம் ( இடைக்குறை) இது பின் திரிந்து உசற்காலம் ஆகி, மெருகேறி உஷற்காலம் ஆயிற்று. யகர சகரப் போலியும் பின் ச >ஶ என்று மெருகும். உஷா என்பது தொடர்புடைய பெண்பெயர்.
உதயம் : உது + அ+ அம் : சூரியன் முன் அங்கு எழுந்தமைதல். உது = முன். யகர உடம்படு மெய். உது + ஐ + ய + ம் எனினுமாம். உதை என்ற சொல்லும் இவ்வாறு எழுந்த சொல். ஒருவாறு எழுந்த சொற்கள் ஒரு பொருளே குறிக்க என்னும் விதி இலது.
றகரம் இன்னொரு சொல்லாக்கத்துக்குப் பயன்படுமாயின் ரகரமாகப் பெரும்பாலும் மாறும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.