இன்று இதுபற்றிச் சில அறிந்துகொள்வோம்.
அசுரர்களுக்குப் பண்டைக்காலத்தில் பல பெயர்கள் இலக்கியங்களில் வழங்கின. அதில் தயித்தியர் என்பதும் ஒன்று.
தைத்தல் என்பது நீங்கள் அறிந்த சொல்தான். ஒன்றைத் தைத்தல் என்றால் இரு துண்டுகளை இணைத்து ஒன்றாக்குதல். வினைச்சொல் தைத்தல் தான்.
தை+ இற்று + இ + அர்
> தையிற்றியர்
> தயித்தியர் ஆகும்.
ற்று என்று ஈரெழுத்துக்கள் இரட்டிவரும் சொற்கள், த்து என்று திரியும் எடுத்துக்காட்டு: சிற்றம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம்.
றகர இரட்டிப்பு த்த என்றானதும்
லகரம் ரகரம் ஆனதும் காண்க.
தை இற்றவர்கள் தை இத்தவர்கள் தயித்தவர். இறு> இற்று > இற்ற> இத்த. எச்சவினைத் திரிபு,
அசுரர்கள் என்போர் சுரர்கள் என்போருடன் இணையாது பிரிந்திருந்தவர்கள்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.