தினம் என்ற சொல், தீ என்ற தமிழிலிருந்து வருகிறது. தீ என்பதோ தேய் என்பதிலிருந்து வருகிறது. சில பொருட்கள் தேய்வதனால் வெப்பம் மிக்குவந்து தீ உண்டாகிவிடுகிறது.
தினம் என்பது தமிழ்ச்சொல் என்று சில தமிழாசிரியர்கள் கூறியுள்ளனர்.
முதலில் தமிழர்கள் தமிழும் சமத்கிருதமும் இருகண்கள் என்றும் ஒன்றுக்கொன்று இணையானவை என்று சொன்னார்கள். வெள்ளைக்காரன் அது எங்கள் கண்டத்திலிருந்து உங்கள் கண்டத்துக்கு வந்த மொழி என்று கட்டுரைத்தபின், அவர்கள் கடன் வாங்கியதைத் தெரிவிக்காமல், நீங்கள் எல்லாம் கடன் வாங்கிவிட்டீர்கள் என்று சொல்லிவிட்டான். அந்நாளிலிருந்து தமிழறிஞர்கள் மனமிகக் கவன்று, அது சமஸ்கிருதம், இது சமஸ்கிருதம் என்று பிரித்து. ஆய்வுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். வால்மிகி என்ற தமிழ்ப்புலவன் தான் முதலில் சமஸ்கிருதத்தில் நூலெழுதியவன். அவன்பாடிய இராமரும் நீலவண்ணத்தவர்தான். வெள்ளையன் அல்லன்.
வான்மிகி என்ற புலவர் சங்கத்திலும் சென்று பாடியுள்ளார்.
சமஸ்கிருதம் என்பது நம் உள்ளூர் பூசை மொழி.
நிற்க, தினம் என்பது நாள் என்று பொருள்படுதலால், தினாத்யா என்ற சொல்லைப் பார்ப்போம். தினம் அற்றுப்போவது தான் தினாத்யா அல்லது தினாத்யாய. அற்றுப்போவது என்றால் முடிந்துபோவது. அறவே இல்லாமல் போவது அன்று. (அல்ல). தினம் அற்றுப் போவதால் இரவு வந்துவிடும். அற்று - இன்று அத்துப்போனால் நாளைச் சூரியன் முளைக்கும். அப்போது வரும். பூமி சுற்றுவதும் நீங்கள் அறிந்ததே.[ Dinātyaya]
தினேஸ்வரன் என்ற பெயரும் பலரும் விரும்பும் பெயர். தினத்துக்கு ஈஸ்வரன் என்றால் சூரியன். இறைவன் > இஷ்வர் ( ஈஷ்வர்)> ஈஸ்வர் மீண்டும் அன் பெற்று ஈஸ்வரன் ஆகும். சூரியன் தெய்வமாக வணங்கப்படுவது. சூடு கொடுப்பவன் ஆதலால் சூடியன்: சூரியன் ஆனான்.
தினாதி என்பது தின ஆதி, காலைப்பொழுது, இப்போது இவ்வாறு பல சொற்கள் உள்ளன. இந்த மாதிரிச் சொற்களின் மூலம் சமஸ்கிருதமும் பல பெற்று சொற்செழுமை அடைந்தது.
தின அன்று அகம் என்பவற்றைக் கொண்டு தின அந்து அக > தினாந்தக என்ற சொல் உண்டானது. மாலை வந்து மருவும் நேரத்தைக் இது குறித்தது.
அன்று அல்ல என்பதுமாகும், அன் து < >அந்து
தேய் > தீ > தினம்போல, தேய் என்பதிலிருந்தே டே ( நாள் ) என்பதை ஐரோப்பியர்கள் உண்டாக்கிக்கொண்டனர்.
தீ இன் அம் > தி ன் அம் > தினம்,.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.