ரஞ்சன், ரஞ்சனி என்ற பெயர்கள் பலருக்கு உள்ளன,
நிறைந்தவன் > நிறைஞ்சவன். இங்கு த என்பது ச என்று மாறிவிட்டது. இது பேச்சுமொழித் திரிபு.
நிறைஞ்சவன் > நிறைஞ்சன்.> நிரஞ்சன்.
2ம் சொல்லில் றை - ர ஆனது முதலாவது ஐகாரக் குறுக்கம், அடுத்து த- ச திரிபு. தனி>சனி போல.
நிரஞ்சன் > ரஞ்சன். நிரஞ்சனி > ரஞ்சனி. ( இது முதற்குறைப்போலி, நிகரம் கெட்டது ). ரகரம் முதலாகாது என்ற தொல்காப்பிய முனிவரின் விதியை மீறிய திரிபு.
உதாரணம்: நிரம்ப > ரொம்ப.
நீர் அங்கன் > நீரங்கன் > ரங்கன் ( கடவுட் பெயர்).
நீரின் அமிசம் ( அம்சம்) ஆன தேவன்.)
வேறு எழுத்துக்களிலும் வரும்:
உரு ஒட்டி > உரொட்டி > ரொட்டி. ( ஓர் உருவாகச் செய்து சூடேற்றிய இருப்புத் தட்டில் ஒட்டி ஒட்டிச் சமைத்துச் [ சுட்டு ]எடுப்பது ).
ஒரு குழிவுள்ள இரும்புச் சட்டியில் பிசைந்த மாவை நிறைத்து, சூட்டில் ஒட்டி எடுப்பது )
நிறை ஒட்டி > நிரொட்டி > ரொட்டி எனினுமாம்,
ரொட்டி என்பதை லொத்தி என்பது சீனர்களின் பேச்சுத் திரிபு. லோ தீ என்று பொருள்கூற அவர்களுக்கு வசதி ஆகிவிடுகிறது. ல - ர திரிபும் உள்ளது.
மூலச்சொல் திரிந்தால் றகர வருக்கம் ரகர வருக்கமாகித் தன் வன்மையை இழந்துவிடும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு: பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.