கதவைக் கொஞ்சம் திறந்து வைத்தால்
காற்றின் ஓட்டம் மிகுமே!--- நீர்
மிதவை போலும் வருமோர் இன்பம்
மெத்த மகிழ்வே தருமே--- குளிர்
உதவும் ஊட்டி கொள்ளும் அளவில்
ஒண்மின் ஆற்றல் குறுகும்---நாளைச்
சிதைவில் திறத்தில் செலவும் குன்றிச்
சேமிப் பாகும் பணமே.
கதவைக் கொஞ்சம் திறந்து வைத்தால் காற்றின் ஓட்டம் மிகுமே!--- கதவைக் கொஞ்சம் நீம்பலாக வைத்துவிட்டு எதிரில் உட்கார்ந்துகொண்டால் காற்றோட்டம் ஏற்படும்; நீர் மிதவை போலும் வருமோர் இன்பம் மெத்த மகிழ்வே தருமே--- படகில் செல்வதுபோல் காற்றின் இன்பம் மகிழ்ச்சியைத் தருகிறது; குளிர் உதவும் ஊட்டி கொள்ளும் அளவில் ஒண்மின் ஆற்றல் குறுகும்--- குளிரூட்டி ( ஏசி) மின்சாரத்தை எடுத்துக்கொள்வது குறைந்துவிடும்; நாளைச் சிதைவில் திறத்தில் செலவும் குன்றி சேமிப் பாகும் பணமே - மின்சாரக் கட்டணச் செலவு குறைந்து பணம் சேமிப்பு உண்டாகும் என்றவாறு.
சிதைவில்: சிதைவு இல். சேதம் அல்லது மாறுதல் இல்லாத. குளிரூட்டி - ஏசி என்னும் குளிர் இயக்கக்கருவி.
நீர்மிதவை போலும் வரும் ஓர் இன்பம் - மிதவையில் செல்லும்போது வரும் தென்றலின் இன்பம். இங்கு: படகுச்செலவின் இன்பம்.
சேமிப்பு< சேர்மிப்பு< .... இச்சொல்லில் இர் மறைந்து சொல் உருவானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.