முன் இடுகையில் எழுப்பிய கேள்விக்கான பதிலை இங்குக் காண்க:
இங்கு தெர் என்ற அடிச்சொல்லிலிருந்து தொடங்குவோம். இதுவே எளிதாகவும் சுருக்கமாகவும் முடிப்பதற்குரிய வழி.
தெர் > தெரி > தெரிதல்.
தெர் > தெர் + உள் > தெருள். ( உள் என்பது விகுதி, எ-டு: கடவுள் ).
தெருள் > தெருட்டு > தெருட்டுதல். தெளிவாக்குதல்.
பூசைமொழியில் இது மாற்றப்பட்டது:
தெருட்டு > திருட்டம் > திருஷ்டம்.
அதி + திருஷ்டம் > அதிருஷ்டம் : மிகத் தெளிவான நிலை. நற்பேறு உண்டான நிலை. உயர்ந்த காட்சி பெற்ற தன்மை.
இது உண்மையில் தாயுமானவர் பெற்றதுபோலும் இறுதிக் காட்சி. சிலரே அடைவது, பிறரால் அடையமுடியாதது. பணத்தை அடைவது அன்று. பணம் பிணத்துக்கு ஒப்பானது, நிலையானது அன்று,
திருஷ்டாந்தம் - தெளிவுபடுத்துவது. சான்று. விளக்கம், எடுத்துக்காட்டுகள்.
திட்டம்: இது இடுகை இன்னொன்றில் விளக்குவோம்.
இங்குச் சொடுக்கி வாசிக்கவும்:
https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_31.html
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.