Pages

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

ஆச்சாரியன்


ஆரியன் என்ற சொல்லும் பலவழிகளில் உருப்பெறும். எடுத்துக்காட்டாக ஆசிரியன் என்பதன் இடைக்குறையாக ஆரியன் என்றாலும் அச்சொல் வந்துவிடுகிறது. ஆ(சி)ரியன் எனக்் காண்க.  வாத்தியார் அறிவாளி என்பதை ஆசிரியன் அறிவாளி என்று மாற்றிச்சொல்லி, ஆசிரியறிவாளி என்றாக்கி, அறிவாளி என்பதற்குப் பதிலாக ஆசிரியாரியன் என்று சொல்லி, ஆசிரிய+ஆரியன் = ஆச்சிரியார்யன் என்றும் பின்னும் திருத்தி ஆச்சாரியன் என்று குறுக்கினால் இச்சொல் வந்துவிடுகிறது. வேறன்று அது.

ஆசிரிய ஆரியன்  
ஆச்சாரியன்.

ஆசிரிய என்பதில் ஆசி என்பதை மட்டும் எடுத்துக்கொள்க.  தமிழில்  ஆச் என்பது ஏற்புடைய சொல்லுரு  அன்று.

ஆ(ச் இ) ஆரியன்.  இவற்றுள் இ என்பதை விடுக.
ஆச்  ஆரியன்
ஆச்சாரியன்,  ஆச்சாரிய  என்றும்   வரும்.  பூசைமொழியில் அன் என்ற ஆண்பால் ஒருமை ஒழிக்கப்பட்டது.   இல்லை.

மேற்கண்டவை ஒலிமுறையில் விளக்கப்பட்டன.  தமிழ்ச் சந்தி முறையிலன்று. இலக்கணத்தின்படியுயன்று, இதுபோலும் சொல்லாக்க இலக்கணம் தமிழ்நூல்களில் சொல்லப்படவில்லை. இதற்கு என்ன காரணம்.  ஏனென்றால்  தமிழ் இலக்கணம் தமிழைத் திருத்தமாகப் பேசவும் எழுதவும் உதவும் இலக்கணம்.  சொல்லாக்கம் சிறிதளவே சொல்லப்பட்டது. சொற்களை ஆக்கிக்கொள்வதற்கு உதவ உங்களுக்குப் போதிக்கப்படும் கலையோ தந்திரமோ அன்று.

தமிழ்ப் புணரியலின்படி,  ஆச்சாரியனாசிரிய  னென்று  வரவேண்டும்.  சொல் மிக நீண்டுவிட்டது. தமிழ் தமிழ் என்று  அரசியலில் உள்ளவர்கள் பெரும்பாலும் கூவுதலின் மூலமாகத் தங்கள்  அக்கறையை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.  தமிழைப் படிப்பவர்கள் குறைவு. இந்த நிலையில் பத்து எழுத்துக்கள் உள்ள ஒரு சொல், சரியன்று என்று  ஒதுக்கப்படலாம்.   சொற்களைக் குறுக்கிச் சிறு புனைவுகளாக்கினால் எடுத்தாளுவதற்கு எளிமையாக  விருக்கும்.  யாம் எழுதும்போதும் நீண்ட சொற்கள் வந்துவிடுகின்றன.  இத்தகைய நிலைகளைக் கருதித்தான் இடைக்குறை முதலிய வசதிகள் கவிதை எழுதுவோருக்கு உதவ உண்டாக்கப்பட்டன. இவையே கருதித்தான்  பண்டை நாட்களில் சொல்லாக்கத்திலும் இந்நெறி கடைப்பிடிக்கப்பட்டது,  தமிழ்க் கவிதைகளில் இசை முதன்மை வாய்ந்தது ஆதலின் அது முறியாமல் ஒழுக, சொற்கள் சிறியவாக்கப்பட்டன.   எ-டு:  கற்றதனால்  ஆய பயனென்கொல்?  என்ற தொடரில்  ஆகிய என்று எழுதினால் இசை முறிந்து வெண்பா கெடும். பண்டை நாட்களில் நெடுஞ்சொற்கள் வழக்கிலும் அருகியே வந்தன. பூசைமொழி அன் விகுதியையும் கொள்ளவில்லை யாதலின்,  ஆச்சார்யா என்று மேலும் சுருக்குண்டது.

பூசைமொழியிலும் சொற்கள் அவர்களின் முயற்சியையும் கடந்து,  நீண்டுதான் விட்டன.  இதனால் கரட்டியல்வு மிகுதியாகவே,  குரு நானக் முதலியவர்கள் குருமுகி முதலிய மொழிகளைக் கையாண்டனர்.. இதனால் சில மொழிகள் ஆற்றொழுக்குப் போலும் நடையை அடைந்தன. இவையாவும் நலம் கருதியவையே  ஆகும்.

ஆசிரியன் என்ற சொல்லே சகர வருக்க எழுத்துகள் இரட்டித்து ஆச்சாரியன் என்று வந்தது என்பது இன்னொரு கருத்தாம். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.