"பொண்ணு மாப்பிளையை வாத்துங்க" என்பது பண்டை நாட்களில் பாட்டிமார் வாய்மொழியில் வருவது. வாழ்த்தியம் என்ற சொல்லே வாத்தியம் ஆனது. இயம் என்பது இசைக்கருவிகள் வாசிக்கும் குழுவினரைக் குறிக்கும் சொல்.
வாழ்த்து > வாத்து இது பேச்சுத்தமிழ் வினைச்சொல். இஃது ஓர் இடைக்குறை.
வாழ்த்தியம் > வாத்தியம். இது இடைக்குறை.
தகரம் சகரமாய்த் திரியும். இடுகைகளில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. காண்க.
வாத்தியம் > வாச்சியம்
இது தனி > சனி என்பதுபோலும் திரிபுதான்.
வாசிச்ச இயம் என்பது பேச்சுமொழித் தொடர்.
இது மருவி வாச்சியம் ஆயிற்று எனினும் ஏற்கலாம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.