பாத்திரம் என்ற சொல்லைப் பார்ப்போம்.
பாத்திரம் என்பது பரவலான வாய் திறந்த ஓர் ஏனம்.
பர ( பரவலான ) திற ( வாய் திறந்த ) கொள்கலம். அல்லது அடுகலன்..
பர என்பது பார்> பா என்று திரியும்.
இது வரு > வார்> வா என்பது போலும் ஒரு திரிபு.
இதன் திரிபை வருக, வாராய், வா என்பவற்றில் உணர்க.
திற ( திறப்பு) என்பது திர என்று திரிந்தது. திற என்பது இன்னொரு சொல்லின் பகுதியாய் வந்தால் திர என்று இடையினமாகும். இது பல சொற்களில் வரும்.
திற+ அம் > திரம், வினைச்சொல் அம் விகுதி பெற்று புதிய சொல்லின் உள்ளுறைவு ஆனது.
பாத்திரம் சொல்லமைந்து விட்டது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.