Pages

சனி, 30 டிசம்பர், 2023

சாட்சி - இன்னொரு முடிபு

 சாட்சி என்ற சொல்லுக்கு இன்னொரு முடிபு கொள்வோம். [ முடிப்பு வேறு, முடிபு எனல் வேறாகும் ] முடிபு conclusion at end of a research ].

ஆடு> சாடு>சாடு+ சி>சா( டு)+சி>சாச்சி.

இச்சொல்லே மக்களிடை வழங்கிய, இன்றும்  அருகிவிடினும் வழங்கி வருகின்ற , சொல்லாகும். எழுத்தில்  இது சாட்சி என்றே வரும்.

சொல்லாக்கத்திலும் சொல்லாக்கப் புணர்விலும் வல்லின ஒலிகள் விலக்கப் படுதல் நடைமுறை ஆகும். யாம் முன்பு பல எடுத்துக் காட்டுகள் பழைய இடுகை களில் தந்துள்ளோம். பீடுமன்>பீமன்>வீமன் என்பது காண்க.

இது பல இடுகைகளில் யாம் தந்த ஒன்றாகும். பீடுடைய மன்னன் என்பது பொருள்.

கடப்பல்> கப்பல் : இங்கும் டகரம் (வல்லினம்)   நீங்கியது காணலாகும்.

அண்மையில் மடங்கை >மங்கை என்பதும் காட்டப்பெற்றது. ஆடவனுக்கு மடங்கிப் போம் அகவையினள் என்பது சொல்லாக்கப் பொருள்.

ஆள்தல்>ஆடுதல் என்பன தொடர்புடையன. ஆள்>சாள்>சாடு தொடர்பினவே. இவை பின்னர் விளக்கப்படும்.

சாட்சி என்பவன்/(ள்)   சான்றுகளின் பான்மையில் ஆளுமை உடையவன்.

பேசியில் எழுதுவதால் இத்துடன் முடிப்போம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

குறிப்புகள்:

கடத்தல் (வினை): கடப்பு+அல்>கடப்பல்,  
நீரில் கடந்து செல்லற்கு உரிய மிதப்பூர்தி.
கடப்பல் - மீட்டுருவாக்கம்.

மடங்குதல். (வினை). மடங்கு+ ஐ.
தங்கை,  அக்கை என்பவற்றோடு ஒப்பிட்டுக்கொள்க.

இவை எளிமையான சொல் மீட்புகளை
அடிப்படையாகக் கொண்டவை.

இச்சொற்களில் ஐ (உயர்வுக் குறிப்பாக) உள்ளமையால் அக்காலத்தில் பெண்கள்
மன்பதைத் தலைவிகளாயிருந்து வழி நடத்தினமை புலப்படும். 
அத்தை என்பதிலும் இது தெரிகிறது . அத்தன் அண்ணன் என்பவற்றுக்கு ஈடாக, அத்தள், அண்ணள் என்னும் சொற்கள் இல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.