சந்நியாசி என்பது பொருளுடன் நாடறிந்த சொல்லே ஆகும்.
இதற்குப் பல்வேறு பொருண்மைகள் இந்திய மொழிகளில் காணலாம், பொதுவாக அறியப்படுவது என்னவென்றால் சந்நியாசிகள் மக்களைச் சார்ந்து வாழாமல் ஒதுங்கி வாழ்வர் என்பதுதான். பெரும்பாலும் திருமணமாகாதவர்கள் என்ற கருத்தும் உள்ளது. ஆகித் துறந்தவர்கள் என்றும் உள்ளனர்.
எந்த மொழியில் எவ்வாறு பொருளறியப்பட்டாலும், நாம் தமிழின் மூலமாக இதற்குப் பொருள் அறிவோம்:
சன்னி என்பதை "தன்னி" எனப் பொருத்துதல்:
தன் - தன் பிறந்த இடம். தன் சொந்த வாழ்வாதாரங்கள்.
நி - நீங்கி,
நீத்தல் - விட்டு நீங்குதல் ( உலகுதொடர்பானற்றை விட்டு விலகுதல்) என்றும் பொருள் தரும். நீப்பேன் ( விட்டு நீங்குவேன்), எதிர்மறை: நீயேன் (விட்டு நீங்கமாட்டேன்) என்ற வடிவங்கள் இப்போது வழங்கவில்லை. இன்னொரு காட்டு: காத்தல் (வினை), காப்பேன், காவேன் என்பன உரியவான வடிவங்கள். ஈகார இறுதிக்கு யகர உடம்படுத்தல் வரும். நீவு(தல்) என்பது வினையாயின் நீவேன் என்று எதிர்மறையில் வரும். இவற்றை வாக்கியங்களில் பயன்படுத்தி உணர்ந்துகொள்க.
பற்றுக்கோடு அல்லது ஆதரவு:
ஆசு > யாசு>யாசு+ இ > யாசித்தல்.
ஒ.நோ: ஆ+ து+ அ + அர் > ஆதவர் ( வகர உடம்படுமெய்), > யாதவர். ஆவளர்ப்போர் என்பது, இங்கு ஆ > யா ஆனது. து = உடைமைப் பொருள்.
பற்றுக்கோடு அல்லது ஆதரவு வேண்டுதல். இரத்தல்.
ஆகவே தன் நிலையின் நீங்கிய ஒருவன் பிறரிடம் யாசித்து வாழ்தல் என்று தமிழ் மூலங்களின் மூலம் பொருள் கிட்டுகிறது.
நீங்குதல் பொருளதான நீ என்பது, நி என்று குறுகியது, பழம் + நீ என்பது பழநி என்று குறுகியது போன்றதே. இளநீர் என்பது எளனி என்று பேச்சில் குறுகி ஒலித்தலும் காண்க. வாய் நீர் என்பது வாணி (வாணி ஊத்துது என்பர்) என்றும் தண்ணீர் என்பது தண்ணி என்றும் ஆகுதல் தெளிவு. நான் நீ என்ற பதிற்பெயர்களில் நீ என்பதும் தன்னின் நீங்கியோனாய் எதிரில் நிற்போன் என்றே பொருளாதலின் நீக்கக் கருத்தே ஆகும்.
நீ என்பதும் குறுகி நின், நினது, நின(பன்மை), நின்றன் ( நின் தன்) என வேற்றுமை வடிவம் படும்.
சந்நியாசி: இச்சொல் தமிழிலிருந்து புறப்பட்டுப் பிற இடங்களுக்கும் பரவிற்று என்று முடிக்க.
ஆசி என்பது யாசி என்றானது, ஆனை > யானை என்பது போலாம்.
சந்நியாசி இறந்துவிட்டால் அவருக்கு நிலக்கொடைகளும் வழங்கினர் என்பதாகத் தெரிகிறது. நினைவிடங்களும் அமைத்தனர். இவற்றுக்கு ஆண்டிசமாதிகள் என்பர். சந்நியாசிகளுக்குத் தமிழ் நாட்டில் ஓர் ஏற்றமிருந்தமை இதனால் பெறப்படும். தமிழ்நாட்டு மக்கள் இறையன்பர் ஆதரவாளர்கள். இவ்வாறு இறந்தோரின் அடக்கவிடங்கள் மலாய் மொழியில் KRAMAT எனப்படும். மதித்துப் போற்றுதற்குரிய இடங்களாக இவை கருதப்படுகின்றன. ( SACRED). இங்கு அடக்கமானவர்களிடம் குறைகளுக்கு மாற்று வேண்டுவோரும் உண்டு. ( நில் வரத்தி : நிவர்த்தி)
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.