எழுந்துநிற் பதற்குமொரு பயிற்சி வேண்டும்
எழுந்ததும் விழுந்தாலும் அமர்ந்தி ருந்தே ,
அழுந்துயர் அடுத்தலிலா முயற்சி வேண்டும்
விழுந்தமை தனைஎண்ணி வியர்ப்ப தின்றிக்
குழந்தையைப் போலதற்கு மனமே வேண்டும்
விழுந்தரம் அடுத்துவெற்றி எனவே தாண்டு!
தொழுங்கரம் தேவனருள் ஈர்த்த வாறே
துலங்குவதே யாவதுமே உலகின் மீதே.
பொருள்:
விழுந்தரம் - விழுந்தடவை அல்லது விழுந்த பொழுது.
தரம் தர நடந்தன என்றார் கம்பநாடர்.
கரம் - கை. (கர் - கை திரிபு)
ஒ நோ: அர் - ஐ. ஆர் - ஐ என்பவுமாம்.
வந்தனர், வந்தனை, வந்தார் என்ற விகுதிகள் ஒன்றிலிருந்து
இன்னொன்று திரிந்த தொடர்புடையவை.
ஏனைச் சொற்கள் எளியவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.