Pages

திங்கள், 27 நவம்பர், 2023

உச்சரித்தல் என்ற சொல் அமைப்பு.

இங்கு இது புதுவதாய்  ஆராய்வோம்.

உது  என்பது சுட்டடிச் சொல்.  உகரமுதலானது.

உது என்றால் முன்னிருப்பது, முன் கொணர்வது என்று பொருள்.

உது  >  உத்து.

இங்கு தகரம்  இரட்டித்தது.   அதாவது து என்பது த்து என்று அழுந்தி வெளிவந்தது.   அது என்பது அத்து என்று தோன்றிச் சிலவிடத்துச் சாரியையாவும் வருதல் போலும்.

உத்து: பொருள் "முன் கொணர்ந்தது."

உத்து > உச்சு.  இது தகர சகரத் திரிபு அமைதல்.

இனி  அரு என்றால் அருகில் இருப்பது   

அரு  + இ :  >  அரி.    அருகில் இடுதல், வைத்தல். 

உச்சு + அரு + இ  >  உச்சரி >  உச்சரித்தல் ( வினைச்சொல்_-)

முன் கொணர்ந்து  அருகிலாக்குதல். defining for you.

நாவின் மூலம் முன் கொண்டுவந்து அருகிலமைத்தல்.

முன் இதன் ( அரு + இ) பொருண்மையை ஆய்வறிஞர் சிலர் கண்டுகொள்ளாமல் விலகிச் சென்றுவிட்டதால்  இது  விளக்கமுறா தொழியலானது. இதனை இங்கு உளப்படுத்தியுள்ளோம். இது கணக்கில் விடுபாடு போலவே. 

Pro-nounce என்பதில் உள்ள முன்னொட்டும் இப்பொருளதே என்பது மகிழ்விக்கிறது.

உ - முன்மைப் பொருள்.

அரு இ - அண்மைப் பொருள்.

இரட்டைப் பொருத்தம் ஆகிவிட்டது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.