பத்துக்கு மேல் தயக்கம் - எண் வரலாறு
மிகப் பழங்காலத்தில், மனிதனுக்கு எண்ணத் தெரியவில்லை. அவனுக்கு - பழம் எத்தனை பறித்தான், முயல் எத்தனை வேட்டையாடினான் என்று இவற்றை அறிந்துகொள்வதற்கே எண்கள் தேவைப்பட்டன. அரிசி முதலிய கூலங்களை ஒன்றாகக் கூட்டி, பெரிய இலைகளில் எடுத்துக்கொண்டு அப்படி எடுப்புற்றவற்றைக் கொண்டே எண்ணிக்கை கூறினான் ( எ-டு: ஒரு கட்டு அல்லது ஒரு மூட்டை). விரிந்த இலைபோல்வதற்கு ஒரு மூட்டுப்போட்டுக் கட்டி,அதைத்தான் "மூட்டை" என்றான். மூட்டு இடப்பட்ட விரி அல்லது விரிப்பு என்று இதை இன்று உணர்ந்துகொள்கிறோம்.
ஒன்பதின் மேற்செல்ல அவன் தயங்கினான் என்பதே உண்மை.
எண்கள் அப்போதுதான் அமைந்துகொண்டிருந்தன.
மரங்களிலும் குகைகளிலும் குடி இருந்த காலத்தில் எங்கேயோ இன்னொரு மரத்தடியில்தான் பூசை ( பூசெய்) நடைபெற்றது. வருகிறவர்களெல்லாம் எளிதாக ஆளுக்கொரு பழம் கொண்டுவந்து சாத்தினால், பூசாரி என்ன செய்வான் பாவம். வைத்துக்கொள்வதற்கு வசதிகள் எதுவும் இல்லை. ஒன்று அவன் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடவேண்டும். அல்லது பக்கத்தில் திரியும் ஆடுமாடுகளுக்கு ஊட்டிவிட வேண்டும். அல்லது உரமாகப் பாவித்து மரத்தடிகளில் போட்டுவிடவேண்டும். அவன் தயங்கியதற்கு அதற்குரிய எண் இல்லாதது மட்டும் காரணமன்று. பற்பல காரணங்கள். எல்லாம் சொன்னால்தான் நம்புவீரென்றால் அதற்காக ஒரு கட்டுரையை எழுதவேண்டும். ஆகவே நம்புவது நல்லது. ( நம்பினார் கெடுவதில்லை!)
ஒன்பதின் மேல் கொஞ்ச காலம் பல என்று சொல்வதே அவனுக்குப் போதுமானதாக இருந்தது. அது அவனின் "தயக்கத்தையே" இன்று காட்டுகிறது. நாளடைவில் ஒருவாறு பல்+ து ( பல-து) என்பதையே பத்து ஆக்கிக்கொண்டு ஓர் எண்ணை உண்டாக்கிக்கொண்டான். இன்றளவும் அது தமிழில் நன்றாகவே வழங்கிவருகிறது.
பூசைகள் செய்யும்போது மட்டும் அந்தத் தயக்கம் அவனுக்கு ஏன் மேலிட்டு நின்றது ? தயங்கும் எண் என்பதைக் காட்ட அவன் தயம் என்றே அதைச் சொன்னான். தய + அம் = தயம். ஓர் அகரம் ஒழிந்தது. பகு அம் >பகம் என்பதில் ஓர் அகரம் தொலைந்தது போலுமே. வேறுபெயர் ஏதும் வைக்காமல் தயம்> தசம் என்பதையே பத்துக்கு மேற்கொண்டது ஒரு குறுக்குவழியே ஆகிவிட்டது. இன்று சிறந்த எண் பத்து, தசம் என்பவை ஆகும்.
தய- தயங்கு.
த - தடை கொண்டு நிற்பது, அ>ய: ஆங்கு என்று பொருள்.
த டு: இதில் டு என்பது வினையாக்க விகுதி. படு, விடு என்பவற்றிலும் வினைவிகுதியே ஆகும்.
தசம் (daśa) என்ற சொல் தமிழ் மூலத்துப் பிறப்பு ஆகும். இது உலக முழுதும் பலமொழிகளில் கிடக்கலாம். ஆய்வு செய்து கொண்டுவாருங்கள்.
பல என்பது மலாய் முதலிய மொழிகளில் "பு-லோ" என்று திரிந்து இறுதி நீண்டுள்ளது. sa puloh (10)
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.