https://sivamaalaa.blogspot.com/2023/07/dinner-in-honour-of-reuben-saruka.html
மேற்கண்ட இடுகையின் தொடர்ச்சி:
வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் ஒரு கவி. இது நம் நன்றியைத் தெரிவிக்கிறது.
(எண்சீர் விருத்தம்)
வந்துலவும் தென்றலுக்கு வணக்கம் சொல்ல,
வாய்வந்தே உதவாமல் மறந்த போதும் -
செந்தணிகைத் தென்றலதும் பிணக்கம் கொண்டு,
சீருடனே மீண்டும்வர மறப்ப துண்டோ?
வந்திருந்து சிறப்பித்த நீங்கள் எல்லாம்
வாழியவே வளர்பிறையாய் என்று மென்றும்!
செந்தமிழால் உங்களையே வாழ்த்தி நின்றேன்:
சிலையுணர்வு பெற்றமைபோல் நலம்சொல் வேனே.
செந்தணிகை - தணிகைமலை(த் தென்றல்). அல்லது அதுபோல் குளிர்ந்த தென்றல்.
சிலை உணர்வு பெற்றமை - ஒரு சிலைக்கு உயிர்வந்தது போல்.
முன் மறந்துவிட்ட காரணத்தாலும் இப்போது நன்றி சொல்வதாலும் சிலை
உணர்வு பெற்றதென்று சொல்லப்பட்டது.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.