முதலை பாடுவதுபோல:-
பசிக்குணவும் எனக்கிங்கே இல்லை என்றால் --- உன்
பரிவினாலே அடங்கிடுமோ என்றன் வேட்கை?
புசிக்கின்றேன் இப்பொழுதே நானும் உன்னை! -- இப்
புவனத்திலே பொறுப்பேன் நானோ அல்லேன்.
உணவுக்கே எனைத்தவிக்கச் செய்தாய் நீயே---- நீ
உண்டுறங்கி நெளிவெடுக்க நானோ நிற்பேன்
இணைக்கிங்கே அணைதந்து சாய்ந்திருப் பாய் ---- வீணாய்
இடைவெளியில் கடைத்தரமாய் ஓய்வேன் நானோ?.
என்று கத்திக்கொண்டு அந்த முதலை அவனைக் கடித்துக் குதறியது. ஆற்றுவிலங்காயினும் காட்டுவிலங்காயினும் அன்பருளால் உணவூட்டுவீராயின், நீங்கள் மேற்கொண்ட கடைப்பிடியில் வழுவுதல் ஒருபோதும் ஆகாது . நீங்களே அதற்கு உணவு ஆகிவிடுவீர்கள்.
இதற்குரிய செய்தித் துணுக்கைக் கீழே படித்து இன்புறுக.
சொடுக்கவும்:
Man attacked by alligator right on his doorstep - The Independent News
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.