துர்க்கையம்மன்
பாட்டு:
இரக்கத்து அன்னை எழில்திருக் கருணை
பரக்கப் பயன் தரு பாயருள் பொருநை
கரக்கு மனமிலாக் கனிவுடன் அணைத்து
சிறக்க வாழ்தரும் செம்மலர்க் கையள்
இரக்கத்து - ரட்சம் பெருகிய; அன்னை -- தாய்
எழில் திருக்கருணை -- அதுவும் எழிலும் திருவும் பொருந்திய கருணை
பரக்கப் பயன் தரு பாயருள் பொருநை--- விரிவான பயன்களைத் தரும் பொருநை ஆறு போல் பாய்வதும் ஆகும்;
கரக்கு மனமிலா -- அதை எண்ணத்தாலும் மறைப்பதே இல்லையாகிய,
கனிவுடன் - அன்புடன் , அணைத்து - ஏற்றுக்கொண்டு,
சிறக்க வாழ்தரும் - சிறந்த வாழ்வை அருளும் ,
செம்மலர்க் கையள் - அழகிய செம்மலர்களை ஏந்தி நிற்கும் கையுடையாள்.
மகிழ்வீர்
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.