கடைகளில் சாப்பிடும் போது----- தம்பி,
கையுடன் கண்களும் நன்றாய்,
இடையிடை வைத்திடும் உணவில் ---- நெடுங்
கவனமும் கொண்டிட வேண்டும்.
பூச்சிகள் வண்டுகள் இருக்கும் ---- நோய்கள்
புசித்தபின் போர்தரும் உடலில்;
காய்ச்சல் தலைவலி வாந்தி --- எனக்
கண்டவை வந்துனைத் தாக்கும்.
வருமுன் காப்பதே மேன்மை --- இன்றேல்
வந்தபின் பயன்சிறு பான்மை!
இருவளர் காலம் காறும் ---- உனக்கு
இல்லத்து உணவெனில் வான்மை.
வான்மை - உயர்வு.
இருவளர்....... - நீண்டகாலம், (வாழ்நாள்)
இன்றேல் - இல்லாவிட்டால்
காறும் - வரை. ( வாழும் காலம் வரை என்பதுபோல் பொருள்)
இதை வாசித்து உணரவும்:
Woman claims she found cockroach in curry rice at Yishun eatery (msn.com)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.