துருக்கரின் துணைவி சொன்ன ---- பொய்
தோய்ந்த மொழிகளெல்லாம்,
பருக்கையும் குழம்புமென்று ---- அள்ளிப்
பருகிடும் குழுவுமுண்டே.
உரக்கவே உளவுரைக்கும் ---- குறுவை
ஒளிப்படம் நிறுவியுள்ளோம்,
நறுக்கென உரைக்குமுண்மை --- அதனால்
நமக்கொரு சிரமமில்லை,
குறுவை ஒளிப்படம் ----- CCTV. குறுகிய மின் சுற்றில் ஓடுவது
துருக்கரின் துணைவி --- துருக்கியைச் சேர்ந்த திருட்டுக் கும்பல் பெண்
இவர்கள் பரப்புரை ஏற்போர் உண்டு.
உள - உள்ளவை
சிரமம் - சிறு தொல்லை. இது சிறுமம் என்ற மறைந்த சொல்லின்
திரிபு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.