தகரம் ( அதாவது த என்ற எழுத்து) பலவிடங்களில் சகரம் ( ச எழுத்து) என்று மாறிவிடுவது இயல்பு என்று நாம் பல இடுகைகளில் கூறியுள்ளோம். புலவர்கள் என்போர் அரசு அமைக்கும் இடத்தில் விருந்தினராகத் தங்கிக்கொண்டு, கவிகள் இயற்றி அரசவையிற் சென்று பாடும் ஏற்பாடுதான் சங்கம். இது ஒரு திரிபுச் சொல். இதன் மூலம் தங்கு என்பது. தங்கு - சங்கு, சங்கம் என்றானது இச்சொல். அரசன் "புலவர்களை நாளை பார்க்கிறேன்" என்றால் நாளைதான் சங்கம். அதைத் தீர்மானிபவன் அரசன். இதுபோலும் ஏற்பாடுகள் எங்கும் நடக்கலாம். அவையெல்லாம் ஏன் சங்கம் என்று பெயர் பெறவில்லை?
இந்தச் சங்கம் என்ற சொல்லைப் பயன்படுத்தியவர்கள் கூட்டங்கள் பிறவற்றை அவ்வாறு அழைக்கவில்லை. நீங்களும்தாம்.
சங்கம் என்று பிறரால் அறியப்பட்ட கட்டடங்கள் எவையும் இல்லை. அரசவை ( அதுகூடி இலக்கியம் ஆயும்போது ) சங்கம். எல்லாவற்றுக்கும் அரசிறைவனே தனிநடுநாயகம்.
இத்தகைய த > ச திரிபு மொழியிற் பரவாலாத் தோன்றும் ஒன்றாகும். மாதம் என்ற சொல் மாசம் என்று வருவதிலிருந்து இதை உணர்ந்துகொள்ளலாம். தனிச்சிறப்பு உடைய சனிக்கிரகம் அல்லது கோள், தனி > சனி என்று திரிந்ததும் அதுவாம்.
சகர முதற்சொற்கள் பலவும் முற்றடைவுகள். த என்று தொடங்கும் பல தொட்டமைவுகள். பண்டைத் தமிழில் தொடுதல் என்பது தொடங்குதல் என்றும் பொருள் தரு சொல். பலர் மறந்திருக்கலாம்.
அவள் மாசமாய் இருக்கிறாள் என்ற இடக்கரடக்கலையும் கவனிக்க. இதற்கு மாதம் என்ற சொல்வடிவைப் பயன்படுத்துவதில்லை,
அறிக மகிழ்க
பின் செப்பம் செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.