இன்று சத்துரு என்ற சொல்லைச் சிந்தித்து அறிந்திடுவோம்.
நட்புடன் நம்முடன் இருப்பவனை நாம் நண்பன் என்கிறோம். ஆனால் சத்துருவுடன் நட்பு என்பதோ இல்லை. நட்பு அற்றொழிந்த நிலையில்தான் சத்துரு இருக்கிறான் என்பது இச்சொல்லுக்குப் போதுமான சொல்லமைப்பு விளக்கமாகும்.
நட்பு அற்று ஒழிந்த நில்லையில் எதிர்ப்பு மனப்பான்மை உருவெடுத்துவிடுகிறது.
அகரத் தொடக்கத்துச் சொற்கள் சகரத் தொடக்கமாகத் திரியும். பலசொற்களை முன் இடுகைகளில் காட்டியுள்ளோம். ஒன்று இவண் நினைவுபடுத்திக் கொள்வோம்.
அமண் > சமண் > சமணர்.
இன்னொன்று வேண்டுமானால், அடு> சடு> சட்டி ( சடு+ இ).
அடு என்பது அடுப்பில்வைத்துச் சூடேற்றுவது.
இனியும் ஒன்று: அடர்- அடை > சடை. இது ஜடை என்று உருக்கொள்ளும்.
அடர்- அடை முதலிய ஒரு மூலத்தில் தோன்றியவை. அடிச்சொல் அடு என்பது.
அடர்முடி > ஜடாமுடி.
நட்பு அற்று உருவெடுப்பவன் : அற்று உரு> அற்றுரு> அத்துரு> சத்துரு.
இப்போது இதன் தமிழ்மூலம் நல்லபடி புரிந்துகொள்ளும் நிலைக்கு உங்களைக் கொண்டுசெல்கிறது.
இன்னொரு சொல்: சகி என்பது. ( தோழி).
அகம் > அகி > சகி.
தலைவியுடன் அகத்தில் தங்கிப் பார்த்துக் கொள்பவள்: சகி.
அகக் களத்தி > சகக்களத்தி > சக்களத்தி. அ - ச.
இயற்சொற்களுக்கு அடுத்து திரிசொற்களைக் கூறினார் தொல்காப்பிய முனிவர். காரணம் என்ன? திரிசொற்கள் இயற்சொற்களுக்கு அடுத்துக் கூடுதலாக இருந்தமைதான்.
இன்று யாம் கணக்கெடுக்கவில்லை. திரிசொற்கள் பெருகி, இனமொழிகளும் தோன்றிவிட்ட படியால், திரிசொற்களே மிகுதி.
எடுத்துக்காட்டு:
வரு ஓ > ( பரு ஓ) > பாரோ ( வருவாய், வாராய்).
இன்று, அற்று ( நட்பு அற்று) உருவெடுப்பவனே சத்துரு என்றறிக.
இந்த மாதிரித் திரிபுகளெல்லாம் இலக்கணங்களில் காட்டப்பெறா.
( மா = அளவு. திரி = திரிக்கப்பெற்றது. மாதிரி - அளவாகத் திரிக்கப்பட்டது.).
சத்துரு: பிற வகையில் திரிந்ததாகவும் கொள்ளும் இச்சொல் ஒரு பல்பிறப்பி.
"சத்துராதிப்பயல்" என்பது சிற்றூர்வழக்கு. சத்துரு என்பது சோதிடர்களுக்குப் பிடித்தமானது ஆகும். சத்துரு தொல்லை என்பர்
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.