திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
திரை என்பதற்கும் திரவியம் என்பதற்கும் ஓர் உறவு உள்ளது. திரை என்பது நீரின் திரட்சி. அடிப்படைக் கருத்து இங்கு திரட்சிதான். திரவியம் - திரட்சி.
திர ( அடிச்சொல் ). திர+ ஐ > திரை. ஐ என்பது தொழிற்பெயர் விகுதி.
திரை கட: திரையைக் கடந்து செல்க. கட என்பது வினைச்சொல். ஏவல் வினை.
அல் ஓடியும் : இரவு வந்துவிடும். அப்போதும் ஓடிக்கொண்டிரு.
திரவியம் தேடு. ( இரவிலும் ) வேலைசெய்து தேடிக்கொண்டிரு. போய்ச் சேர்ந்த தேசத்தில்.
கட + அல் > கடல், இச்சொல்லில் ஓர் அகரம் கெட்டது.
கடத்தற்கு அரியது கடல்.
அல் விகுதி என்றாலும், அல்லாதது ( கடத்தற்கு அல்லாதது ) என்றாலும்
பொருள் தந்துகொண்டிருக்கிறது.
இது மகிழ்வு தரும் பொருண்மை.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.