Pages

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

பக்திப் பொதுநலப் பூசை


[  வரும் சுமங்கலிப் பூசையில் அன்பர்கட்கு அளிக்கவும் அம்மனுக்கு அணிவிக்கவும் வாங்கி வைத்த பொருட்கள்,  இவ்வன்புப் பூசை அலுவலாளர்களால் கோவிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டன .

இவர்களைப் பாராட்டும்  முகமாக  இந்தக் கவிதை வெளிவருகிறது, 

படங்களுடன்]   


 தந்நலம் அற்ற சேவை ----  உள்ளம்

தாம்தம     வென்கின்ற எண்ணங்கள் இல்லா,

பொன்னலம் மக்கள்நலம்----  என்று

புவிதனில் போற்றுநர் மேவிய பூசை.


(சுமங்கலிப் பூசை என்றால் என்ன என்பதற்கு இது விடை.)


பூசையிற் பங்குகொண்டோர்  ---- தமக்குப்

பொற்கைகளால் அன்னை  அற்பளிப்புத் தர,

ஆசையைக் கொண்ட அன்பர் ----  இங்கே

ஆயத்த மாயினர் ஏயநல் அன்பினால்.


(பூசையில் கலந்துகொள்வோர்  அன்னையின் அருளை  அவள்தன் பரிசாக

வேண்டுவர் )



சுமங்கலிப் பூசைபொன்   னேபோல்  சுணங்கா

நலங்கள் பலவால் இலங்க ----  வலங்கொண்டு

நன்றே நடைபெற்று  நாடெங்கும் போற்றவே

மன்றே வணங்கிடு மாண்பு.

( இது நம் வேண்டுதல் )










தந்நலம் (  இது தன்னலம் என்பதன் பன்மை)

தாம் தம:    தாம் என்பது  தான் என்பதன் பன்மை.

தம என்பது தமது என்பதன் பன்மை.

தாம் தம என்பது தாளம்போலும் வருதல் காண்க.

மக்கள்நலம் புணர்ச்சியில் மக்கணலம் என்று வரும்.

அற்பளிப்பு  -  அன்பளிப்பு. அம்மை தரும் அன்பு,   அருள்.

அசை ( வி)  > முதல் நீண்டு ஆசை என்று பெயர்ச்சொல் ஆகும்.

விரும்பிய ஒன்றன்மேல் மனம் அசைவதுதான் ( சலனம்)  ஆசை.

தமிழென்பது உணர்க.

ஏய - இயைய, இசைந்த.

சுணங்கா  -  வருதலில் தடையில்லா(த).

இந்தவரியில் நல-, பல-, இல-, வல என்று போட்டுள்ளோம். 

சுவைக்க.

நன்றே என்னும் அடியில் மூன்று மோனைகள்.  


அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

சில எழுத்துப்பிழைகள் சரிசெய்யப்பட்டன    6.08.22




மெய்ப்பு  பின்னர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.