Pages

சனி, 9 ஜூலை, 2022

கோவிட்டினாலும் நன்மையா?

 மருந்துகளும் முடிந்துபோச்சு நம்மகடையிலே  ---  அம்மே

மாந்தர்களும் சோர்ந்துபோன கிருமிகளாலே!

இருந்திடப்பலர் நோய்விலக்க மருந்துதேடினார் ----  அதனால்

இன்றுலகின் மருந்தாலைகள் பெருதொகைகண்டார்.

இருந்தவர்கள் இறந்துபோனார் வருந்துகிறோம்நாம் ----ஆனால்

இறந்திடாமல் மருந்துகொண்டு சிறந்தவர்பல்லோர்!

திருந்துதொழில் வளர்ந்தசில நாமுமறிந்தோம்  ---- கண்டாய்

அழிந்தசில தாமுமுண்டிப்  பரந்த ஞாலமே


பல்லோர் -  பலர்

ஞாலம் -  உலகம்

பரந்த -  விரிவான.

திருந்துதொழில் -  நல்ல தொழில்கள்.

கண்டாய் -  நமக்கும் தெரிகிறது என்பது.

தாமுமுண்டிப்  -  தாமும் உண்டு இப் (பரந்த)

முடிந்துபோச்சு -  இங்கு முடிந்தனவே என்பதுதான்  இலக்கணபடி வரும். இது பேச்சுவழக்குத் தழுவி,  போச்சு எனப்பட்டது.




இப்படம் கடையில் மருந்துகள் குறைந்தன என்பதனைக் காட்டுகிறது. தேடிய மருந்து கிட்டவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.