இருபது நீளாண்டுகள் --- தம்பீ
இருந்தவர் மறைந்தவர் பற்பலரே,
தருபுதுக் கருத்துகளால்--- அன்று இத்
தரணியை மலைப்புறச் செய்தனர்காண்!
வருபதி யாயிருந்தோர்---- நமை
வருந்துமிந் நோய்நுண்மி பரந்தழிக்க,
ஒருபழி செய்திலரே--- உலகு
ஒன்றித் தழைத்திடச் செய்ததன்றி.
சென்ற இருபது முப்பது ஆண்டுகளில் இருந்த அரசியல் தலைவர்கள் நோய்நுண்மிப் போர் எதையும் செய்யவில்லை. உலகு தழைக்கப் பல செய்தனர். அவர்களைப் பழிசொல்ல ஒன்றுமில்லை. இதைக் கூறுவது இக்கவி.
வருபதி .... - வந்த அரசியல் தலைவர்கள்.
கோவிட் பரப்பியதுபோல பழிச்செயல்கள் எதையும் செய்யவில்லை. ஆகவே இப்போது நிலை மாறிவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.