ஒவ்வொரு நிமிடமும் உழைப்பென்றாலும்
எவ்வாறேனும் தொழுதல் இழைக்கநின்றார்;
செவ்வாயில் சிறிதுகாலம் பசித்திருந்தார்
ஒவ்வாதன யாவையும் ஒசித்துவீசி,
செவ்வானில் பகலோனின் ஆட்சிக்காலில்
தவ்வழிக்கும் துர்க்கையம்மை மாட்சிகண்டார்.
செவ்வாய் - செவ்வாய்க்கிழமை
ஒசித்துவீசி - களைந்து எறிந்துவிட்டு.
பசித்து - உண்ணாமை கடைப்பிடித்து
ஆட்சிக்காலில் - ஆளும் காலத்தில், அதாவது ஒளிவீசிக்கொண்டிருக்கையில்.
தவ்வழிக்கும் - கெடுதல் நீக்கும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.